Bigg Boss Day45 Promo2 : Ithuku Per Enna Bigg Boss? | Kamal Haasan | Abirami | Mugen | Bigg Boss Promo Update | Tamil Cinema News
சரவணன் செய்தது தவறு என்றால் நீங்க செய்யுற வேலை என்ன பாஸ்? என வெளியான ப்ரோமோ விடியோவை வைத்து நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

Bigg Boss Day45 Promo2 : பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. முதல் ப்ரோமோ வீடியோவில் பிக் பாஸ் கொடுத்த டாஸ்க்கிற்கான ப்ரோமோ வெளியானது.

இரண்டாவது ப்ரோமோ வீடியோவில் அபிராமி முகேனிடம் தனியா அமர்ந்து பேசி கொண்டிருக்கும் போது ஐ லவ் யூ முகேன் என கூறுகிறார்.

அதற்கு முகேன் என்ன சொல்றதுனு தெரியல என கூறுகிறார். மேலும் என் காதலை ஏற்றுக்கோனு நான் சொல்லவே இல்லையே எனவும் கூறுகிறார்.

இதையெல்லாம் பார்க்கும் நெட்டிசன்கள் சரவணன் பெண்களை இழிவு படுத்தும் விதமாக பேசினார் என அவரை வெளியேற்றி விட்டீர்கள்.

அப்போது இதெல்லாம் தவறு இல்லையா பிக் பாஸ்? கவின் நாலு பொண்ணுங்க பின்னாடி லவ்னு சுத்துனது தப்பு இல்லையா பிக் பாஸ் என கண்ட மேனிக்கு விமர்சித்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.