பிக் பாஸ் ஆரியுடன் மதுமிதா வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

Bigg Boss Aari With Madhumitha : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் பங்கேற்று டைட்டிலை வென்றவர் ஆரி. இவருக்கு இந்த நிகழ்ச்சி மூலமாக மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் உருவானது.

பிக் பாஸ் நிகழ்ச்சியினை தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் காமெடி நடிகையான மதுமிதா பங்ஷன் ஒன்றில் கலந்து கொண்டபோது ஆரியை சந்தித்து உள்ளார். அப்போது அவருடன் புகைப்படம் எடுத்து கொண்டுள்ளார்.

அந்த புகைப்படத்தை இணையதள பக்கத்தில் வெளியிட்டு பங்ஷன் ஒன்றில் நல்ல மனிதர் ஆரியை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது என கூறியுள்ளார். மதுமிதா வெளியிட்ட இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ்கள் குவிந்து வருகின்றன.