இந்த வாரம் ஜோடியாக பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போகும் இரண்டு பிரபலங்கள் யார் என தெரிய வந்துள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஆறாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து குறைந்து ஓட்டுக்களை பெற்று இருந்த குயின்ஷி வெளியேற்றப்பட்டார். அவரது வெளியேற்றத்துக்குப் பிறகு கமல் இந்த வாரம் டபுள் எலிமினேஷன் இருக்கும் என அறிவித்தார்.

இப்படியான நிலையில் நாமினேஷன் பட்டியலில் இடம் பெற்று இருந்தவர்கள் அசிம் மற்றும் தனலட்சுமி அதிக ஓட்டுக்களுடன் சேஃப் சோனில் இருக்கின்றனர். கடைசி இரண்டு இடங்களில் ராம் மற்றும் ஆயிஷா ஆகியோர் இருப்பதாக தெரியவந்துள்ளது.

இதனால் இவர்கள் இருவரே பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேற அதிக வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.