Bigg Boss 4 New Contestants Update

வனிதாவை சீண்டி TRP-ஐ எகிற வைக்க விஜய் டிவி திட்டமிட்டு வருகிறது.

Bigg Boss 4 New Contestants Update : தமிழ் சின்னத்திரை உலகநாயகன் கமல்ஹாசனின் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் மூன்று சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில் அடுத்ததாக நான்காவது சீசன் விரைவில் தொடங்க உள்ளது.

இந்த நிகழ்ச்சிக்கான அதிகாரப்பூர்வமான டீசர் வெளியாகி விட்ட நிலையில் அடுத்ததாக போட்டியாளர்கள் யாராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

ரம்யா பாண்டியன், விஜய் டிவி புகழ், மணிமேகலை, கிரன் ரதொட், டிக் டாக் இலக்கியா என பலரின் பெயர்கள் இந்த லிஸ்டில் அடிபட்டு வருகிறது.

நீ செய்தது எல்லாமே சரி பேபி.. நிறைய சாதித்து இருக்க, ஆனால்??? மீரா மிதுனிடம் பம்பிய வனிதா – இதோ இந்த பதிவை நீங்களே பாருங்க!(Opens in a new browser tab)

இவர்களைத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய இன்னொருவரின் பெயரும் இடம் பெறத் தொடங்கியுள்ளது. அவர் வனிதாவை தீண்டி யூட்யூபில் பிரபலமான சூர்யா தேவி தான் என கூறப்படுகிறது.

சூர்யா தேவிக்கும் வனிதாவுக்கும் இடையே தொடர்ச்சியாக மோதல்கள் ஏற்பட்டு வந்த நிலையில் சூர்யா தேவியை பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைத்து வனிதாவை ஆரம்பத்தில் கெஸ்டாக அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் இருவருக்கும் இடையே நிச்சயம் சண்டை உருவாகும். இதன்மூலம் டிஆர்பியை எகிற வைக்கலாம் என பிக்பாஸ் திட்டத்தை தீட்டி வருவதாக கூறப்படுகிறது.

அனைத்தும் முடிந்த பின்னர் இறுதியில் விஜய் டிவியே வனிதாவையும் சூர்யா தேவியையும் ஒன்று சேர்த்து நல்லவர்களாக வெளியே அனுப்பி வைக்கும் எனவும் எதிர்பார்க்கலாம்‌.