Bigg Boss 12th Eviction Details

பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறியது யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Bigg Boss 12th Eviction Details : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் நான்காவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இன்னும் ஒரே வாரத்தில் நிகழ்ச்சி முழுமையாக முடிவடைய உள்ளது.

இதனால் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் உள்ள அனைவருமே நாமினேசன் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். அந்த வகையில் இந்த வாரம் மிகக்குறைந்த ஓட்டுக்களைப் பெற்ற ஷிவானி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல் கிடைத்துள்ளது.

இவரை வீட்டில் எதுவுமே செய்யாமல் இருந்த சிவானி இந்த டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கில் தான் கடுமையாக போராடினார். ஆனால் அவர் இந்த வாரம் வெளியேற உள்ளார்.

இதனால் யார் அதிர்ச்சி அடைகிறார்களோ இல்லையோ நிச்சயம் பாலாஜிக்கு இது ஒரு ஷாக்காக இருக்கும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.