லட்சுமியிடம் நான் தான் உன்னுடைய தாத்தா என உண்மையை உடைத்துள்ளார் கண்ணம்மாவின் அப்பா.

Bharathi Kannamma Update 23.08.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல் பாரதி கண்ணம்மா. லட்சுமியை பாரதி தன்னுடைய வீட்டில் அழைத்துச் சென்று வைத்துள்ள நிலையில் பாரதியை வாங்க அங்கிள் சாப்பிடலாம் என லஷ்மி கூப்பிடுகிறார். பாரதி வேண்டாம் என கூட மீண்டும் மீண்டும் பிரச்னை அவரை கூப்பிட பாரதி அவரை திட்டியதால் சோகத்தில் உள்ளார் லட்சுமி.

குழந்தையின் சிகிச்சைக்காக, ஒலிம்பிக் பதக்கத்தை ஏலம் விட்ட தாயுள்ளம்..

அப்போது சௌந்தர்யா அங்கு வந்து லஷ்மி பார்த்து என்னாச்சு என கேட்ட போது பாரதி அங்கிள் என்னை திட்டிட்டார். இது வரைக்கும் அவர் என்கிட்ட அப்படி பேசினது இல்ல. என்னை எப்படியாச்சும் சமையல் அம்மா வீட்டிலேயே விட்டுருங்க பாட்டி என கூறுகிறார்.

சௌந்தர்யா லட்சுமியை ஒருவழியாக சமாதானப்படுத்தி சாப்பிட அனுப்புகிறார். பின்னர் பாரதி ஹேமாவை பார்க்க கண்ணமா வீட்டிற்கு செல்கிறார். அங்கு ஹேமாவை பார்த்து அவருடன் பேசி சிரித்து விளையாடுகிறார். லஷ்மி எங்க என கண்ணம்மா பலமுறை கேட்டு அதனை கண்டும் காணாமல் இருக்கிறார் பாரதி.

பின்னர் ஹேமாவை தூங்க வைத்து விட்டு அங்கிருந்து பாரதி வீட்டிற்கு கிளம்பும் போது மீண்டும் கண்ணம்மா லஷ்மி பற்றி கேட்கிறார். அன்னைக்கு சொன்னது தான் இப்பவும் லஷ்மியின் பெற்றோர் வராமல் அவளை அனுப்ப மாட்டேன் என பாரதி கூறுகிறார். நான்தான் லட்சுமியின் அம்மா என பதில் சொல்ல முடியாமல் கண்ணம்மா தவிக்கிறார்.

லட்சுமியிடம் சௌந்தர்யாவும் அவருடைய கணவரும் பேசிக்கொண்டிருக்கும் போது கண்ணம்மாவின் அப்பா வருகிறார். லஷ்மியை அழைத்து சாக்லேட் கொடுக்க அதை வாங்க மறுக்கிறார் லஷ்மி.

Simbu-வை பழிவாங்க முயற்சி பண்ணுறாங்க – Silambarasan-னின் அம்மா Usha ஆவேசம்..! 

யாருனே தெரியாத உங்ககிட்ட நான் எதையும் வாங்கக் கூடாதுன்னு எங்க அம்மா சொல்லி இருக்காங்க என லஷ்மி கூறுகிறார். நான் ஒன்னும் தெரியாதவங்க இல்லம்மா உன்னுடைய தாத்தா என கண்ணம்மாவின் அப்பா கூறுகிறார். என்னது நீங்க என் தாத்தா வா? என லஷ்மி கேட்கிறார். அத்துடன் முடிகிறது இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.