பாரதியை வைத்து அஞ்சலியை கொல்ல புது திட்டம் தீட்டியுள்ளார் வெண்பா.

Bharathi Kannamma Update 20.08.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. கண்ணம்மாவும் தன்னுடைய குடும்பத்துடன் சேர்ந்து லட்சுமி கண்ணம்மாவின் மகள் என்பதை மறைத்து பற்றி வெண்பாவிடம் கூறி வருத்தப்படுகிறார் பாரதி.

இது தான் நமக்கு கிடைத்த சான்ஸ் என கண்ணம்மா எல்லாம் திட்டம் போட்டு தான் இதைச் செய்திருக்கிறார். உன்னோட மகளை அவளிடம் நெருங்கி பழக வைத்து அவளுடைய மகளை உன்னிடம் பழக வைத்துள்ளார். லஷ்மி உன்னோட பொண்ணு தானே தெரிஞ்சா நீ போயிட்டு டிஎன்ஏ டெஸ்ட் எடுத்து அவர் என்னோட பொண்ணு இல்லை என்பதை நிரூபித்திடுவ அதான் இப்படி உனக்குத் தெரியாமல் இருக்கணும்னு மறைச்சுட்டாங்க என வெண்பா கூறுகிறார்.

நான் எதற்கு டிஎன்ஏ டெஸ்ட் எடுக்கணும்? அதான் ஒன்றுக்கு இரண்டு முறை எடுத்தாச்சுல இனி எதற்காகவும் டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க மாட்டேன் என பாரதி கூறிவிடுகிறார். லஷ்மிக்கு சௌந்தர்யாவும் அவருடைய கணவரும் சாப்பாடு ஊட்டி கொண்டிருக்கின்றனர்.

பாரதியை டிஎன்ஏ டெஸ்ட் எடுக்கச் சொல்லும் வெண்பா, அஞ்சலியைக் கொல்ல புது திட்டம் - பாரதிகண்ணம்மா இன்றைய எபிசோட் அப்டேட் ‌

எனக்கு போதும் என லஷ்மி மொட்டையாக கூற தாத்தா பாட்டினு சொல்லு என சௌந்தர்யா கூறுகிறார். நான் எதுக்கு உங்கள தாத்தா பாட்டி என்று கூப்பிட்டேன் நீங்க என்ன எனக்கு சொந்தமா தாத்தா பாட்டியா என கேள்வி கேட்கிறார் லக்ஷ்மி. பாரதி அங்கிள் எதுக்கு என்ன இங்கு கூட்டி வந்து வச்சிருக்காரு எனக் கேட்கிறார். அவர்களும் எதை எதையோ சொல்லி சமாளித்து விடுகின்றனர்.

பின்னர் லட்சுமி ஹேமா அதே பள்ளியில் படிக்க போவதாக கூற அதை நினைத்து சௌந்தர்யா சந்தோஷப்படுகிறார்.

இன்னொருபுறம் வெண்பா அஞ்சலிக்கு போன் செய்து உடல் நிலையை விசாரிக்கிறார். பின்னர் உனக்கு நான் கொஞ்சம் மருந்து மாத்திரை எழுதித் தரேன். அதை சாப்பிட்டால் குணமாவதற்கு கொஞ்சம் வாய்ப்பு இருக்கு என நைசாக பேசி அஞ்சலியை சம்மதிக்க வைக்கிறார். ஆனால் அது குணமாவதற்கான மாத்திரை அல்ல, கொஞ்சம் கொஞ்சமாக அஞ்சலியை கொலவதற்கான மாத்திரை. இதை என்பார் சாந்தியிடம் கூற அவர் உங்களோட பெயர்ல அந்த மாத்திரை கொடுக்காமல் அதை பாரதியோட பேர்ல கொடுங்க என ஐடியா கொடுக்கிறார்.

இதனால் அஞ்சலிக்கு எது நடந்தாலும் நீங்க சிக்க மாட்டீங்க என சாந்தி ஐடியா கொடுக்கிறார். வெங்காயம் இது நல்ல ஐடியாவா இருக்கே என அதை செயல்படுத்த திட்டம் போடுகிறார். இத்துடன் முடிகிறது இன்றைய எபிசோட்.