அஞ்சலி சீமந்தத்திற்கு கண்ணம்மா செல்ல அங்கு அவரை பார்த்த சௌந்தர்யா அதிர்ச்சி அடைந்துள்ளார்.

Bharathi Kannamma Update 02.09.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. அஞ்சலிக்கு நடந்த அவரது வீட்டில் தடபுடலான வேலை நடக்கிறது.

தேசம் பெருமை கொள்கிறது : தமிழக வீரருக்கு பிரதமர் வாழ்த்து

அனைவருக்கும் முன்பே அஞ்சலி வீட்டுக்குச் சென்ற அகிலன் அவருக்கு தங்க நகைகளாக வாங்கி கொடுத்து சர்ப்ரைஸ் ஷாக் கொடுக்கிறார். அஞ்சலி ஒரு பக்கம் எல்லாம் இவர்களுடைய சந்தோஷத்திற்காக தான். எனக்கு பதிலா என் புள்ள தான் இந்த பூமியில இருக்கும் என கூறுகிறார்.

அதன் பின்னர் வெண்பா சீமந்ததுக்கு ரெடியாகி வருகிறார். தன் பட்டு புடவையில் இருக்கும் புகைப்படத்தை பாரதிக்கு அனுப்புகிறார். பாரதி ஒன்டர்புல் என மெசேஜ் அனுப்ப அடுத்தடுத்து தொடர்ந்து பல புகைப்படங்களை அனுப்புகிறார். பாரதிக்கு நான் வருவது சர்ப்ரைஸ் ஷாக்காக இருக்கும் என கூறுகிறார்.

சௌந்தர்யா மற்றும் அவரது கணவரும் ஹேமாவும் வருவதற்கு முன்பாகவே பாரதி அஞ்சலி வீட்டிற்கு வந்து விடுகிறார். சௌந்தர்யா மற்றும் அவரது கணவரும் வந்து இறங்குகின்றனர்.

Sathish படத்தால் வடிவேலு படத்திற்கு வந்த சிக்கல்…!

இதனையடுத்து கண்ணம்மா ஆட்டோவில் வந்து இறங்குகிறார். கண்ணம்மாவை பார்த்ததும் சௌந்தர்யா அதிர்ச்சி அடைகிறார். இரட்டை குழந்தை விஷயத்தை கேட்பார் என ஓடி ஒளிய முயற்சி செய்கிறார். பாரதியும் கண்ணம்மா வருவதை மேலே இருந்து பார்க்கிறார். அத்துடன் முடிகிறது இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.