விவாகரத்து நோட்டீஸில் கையெழுத்து கேட்க கண்ணம்மா அவரிடம் தன்னுடைய இரண்டாவது மகள் யார் என கேட்டு கெஞ்சுகிறார்.

Bharathi Kannamma Upcomming Episodes Update : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. பாரதியும் கண்ணம்மாவும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். கண்ணம்மாவின் இரண்டு மகள்களில் ஒருவரான லஷ்மி கண்ணம்மாவுடன் இருக்க இன்னொரு மகள் ஹேமா பாரதியுடன் இருக்கிறார். தன்னுடைய மகள் என தெரியாமல் இருக்கிறார் கண்ணம்மா.

50 ஆண்டுக்குப் பிறகு, இந்தியா வரலாற்று வெற்றி : பிரதமர் மோடி பாராட்டு

இந்த நிலையில் இனிவரும் எபிசோடுகளில் வெண்பா உன்னுடைய இரண்டாவது மகள் யார் என எனக்கு தெரியும் என தன் அம்மாவிடம் கூற ஆனால் அதை நான் சொல்ல வேண்டுமென்றால் பாரதியுடன் ஆன விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்துப் போடு கணவருடன் கேட்டு அதிர்ச்சி கொடுப்பதாக நீ தன்னுடைய மகள் யார் என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் கண்ணம்மாவும் கையெழுத்து போட முடிவு எடுக்கிறார் என கூறப்படுகிறது.

நடிகர்களுக்கு 100 கோடி 50 கோடி சம்பளம்…இது ஏழைகள் நாடு – Director Velu Prabhakaran Speech

இந்த சமயத்தில்தான் சௌந்தர்யா என்ட்ரி கொடுத்து கண்ணம்மா அவருடன் அவருடைய இரண்டாவது மகள் யார் என்ற உண்மையை உடைத்து விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து போடுவதை தடுத்து நிறுத்துவதாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. ஒருவேளை உண்மையாக இருந்தால் அடுத்து வரும் எபிசோடுகள் இப்படித்தான் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.