வெண்பா செய்த சதி குறித்து கண்ணம்மாவால் அஞ்சலிக்கு தெரிய வருகிறது. ‌‌

Bharathi Kannamma Serial Episode Update 23.10.21 : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. கண்ணம்மா வீட்டுக்கு சென்றுள்ள அஞ்சலிக்கு கண்ணம்மா கசாயத்தை போட்டு கொடுக்கிறார். கசாயம் குடிக்க தயங்கும் அஞ்சலியை குழந்தைகளை பிடிச்சிட்டாங்க குடி உடம்புக்கு நல்லது அப்பதான் நார்மல் டெலிவரி ஆகும் என்று கூறுகிறார்.

அதன் பிறகு நீ இங்க வந்து ஒரு நாள் முழுக்க ஆகப்போகுது ஆனால் இதுவரைக்கும் எந்த மாத்திரையும் போட்டு நான் பார்க்கல. உனக்கு டாக்டர் எந்த மாத்திரையும் எழுதி கொடுக்கலையா? என கேட்கிறார். அதற்கு அஞ்சலி என்ன பதில் சொல்வது என தெரியாமல் தவிக்க கண்ணம்மா திரும்பத் திரும்ப கேட்க எழுதி கொடுத்தாங்க ஆனால் நேற்றோடு மாத்திரை தீர்ந்துடுச்சு எனக் கூறுகிறார். சரி டாக்டர் மாத்திரை எழுதிக் கொடுத்த சீட்டை கொடு நான் போய் வாங்கிட்டு வருகிறேன் என கண்ணம்மா கேட்க அஞ்சலி எடுத்துக் கொடுக்கிறார்.

தென்காசி விசுவநாத சுவாமி கோவில் : திருக்கல்யாண திருவிழா இன்று தொடக்கம்

வெண்பா செய்த சதி.. கண்ணம்மாவால் அஞ்சலிக்கு தெரியவந்த உண்மை - பாரதிகண்ணம்மா இன்றைய சீரியல் எபிசோட் அப்டேட்

பாரதி எழுதிக் கொடுத்ததாக வெண்பா கொடுத்த மாத்திரை சீட்டை கொடுக்கிறார். இது பாரதியோடு கையெழுத்து இல்லையே என கண்ணம்மா கூற ஷாக் ஆகிறார் அஞ்சலி. வெண்பா எதையோ கேம் விளையாடி இருக்கா என புரிந்து கொள்கிறார். அதன் பின்னர் தன் அம்மாவிடம் உண்மையை சொல்லாமல் இந்த மாத்திரையை போட்டால் தலைவலி, மயக்கம் என வருவதாக கூறுகிறார்.

ஒரு சிலருக்கு இங்கிலீஷ் மாத்திரை கொடுத்துக் அது எனக்கும் அப்படிதான் இருந்துச்சு. அதனால் நான் நாட்டு மருந்து எடுத்துக் கொண்டேன் என கூறுகிறார். வீட்டுக்கு பக்கத்துல ஒரு பாட்டி கர்ப்பிணி பெண்களுக்கு நாட்டுமருந்து தராங்க காலையில அங்க போய் மருந்து வாங்கிக்கலாம் என கூறுகிறார்.

இந்தப் பக்கம் சௌந்தர்யாவின் அவருடைய கணவரும் கண்ணம்மா எனக்கு தோன்றுவது தான் அனுப்புவேன் என கூறியதை நினைத்து குழம்பிக் கொண்டிருக்கின்றனர். குழந்தைகள் ஓடி விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்து ரசித்த கண்ணம்மா அதன் பிறகு அவர்களுடன் தூங்க சென்று விடுகிறார். அஞ்சலி உங்கள் பக்கத்தில் கொஞ்ச நேரம் உட்கார்ந்து விட்டு அதுக்கு அப்புறம் சென்று தூங்குவதாக கூறுகிறார்.

பிரபல Model-கள் பங்கேற்ற கொண்ட Fashion Show 2021

கண்ணம்மா பால்கனியில் இரண்டு குழந்தைகளுடன் படுத்துக் கொண்டு அவர்களுக்கு கதை கூறி தூங்க வைக்கிறார். இந்தப் பக்கம் பாரதி ஹேமா இல்லாமல் ரொம்ப வருத்தப்படுகிறார். நாளைக்கு முதல் வேலையா அஞ்சலி வீட்டுக்கு போயிட்டு ஹோமாவை கூட்டி வந்துவிடலாம் என முடிவு செய்கிறார். இத்துடன் முடிகிறது இன்றைய பாரதிகண்ணம்மா சீரியல் எபிசோட்.