கண்ணம்மா வீட்டில் போனை மறந்து வைத்து விட்டு வந்துள்ளார் பாரதி.

Bharathi Kannamma Episode Update 28.10.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. தன்னுடைய மகள் ஹேமாவை தன்னிடமிருந்து பிரித்து விடாதே என கண்ணம்மா வீட்டிற்குச் சென்று காலில் விழாத குறையாக கெஞ்சி அழுதார் பாரதி. மிச்சம் இருக்க என்னுடைய வாழ்க்கையை வாழ எனக்கு ஹேமா வேண்டும். ஹேமாவோட பாசத்தை யாரோடும் பங்கு போட நான் விரும்பல என பேசினார். அன்னைக்கு என் குழந்தையே இல்லை எனக் கூறிய பாரதி இன்னைக்கு வார்த்தைக்கு வார்த்தை என் பொண்ணு என் பொண்ணு என சொல்வதை கேட்டு கண்ணம்மா உள்ளுக்குள் கொஞ்சம் மகிழ்ச்சி அடைந்தார். பிறகு பாரதி கிளம்பியபோது அந்த நேரத்தில் லஷ்மி உள்ளே வருகிறார். டாக்டர் அங்கிள் நேத்து ஏன் வந்து உடனே போயிட்டீங்க என கேட்க கொஞ்சம் அவசர வேலையாக கிளம்பிட்டேன் எனக் கூறினார்.

மறுபடியும் நீங்க வரும்போது உங்ககிட்ட ஒன்னு காமிக்கணும்னு இருந்தேன் என கூற பாரதி என்னது எடுத்துட்டு வா போ என கூறினார். உள்ளே சென்ற லட்சுமி தன்னுடைய டேர்ம் டெஸ்ட் பேப்பர்களை எடுத்து வந்து கொடுத்து எல்லாத்தையும் 90 சதவீதம் மார்க் எடுத்து இருப்பதாக கூறினார். பிறகு லட்சுமியை பாராட்டிய பாரதி இந்த மாசம் டேர்ம் பீஸ் கட்டியாச்சா என கேட்டார். தெரியலையே அங்கிள் கட்டலனு என்றுதான் நினைக்கிறேன் என்று லட்சுமி கூறினார். பிறகு தன் பேக்கில் இருந்து பணத்தை எடுத்து லக்ஷ்மியிடம் கொடுத்தார். பணத்தை வாங்க தயங்கிய லக்ஷ்மியிடம் உங்க அம்மா எதுவும் சொல்ல மாட்டாங்க வாங்கிக்க என பாரதி கூறினார். பிறகு கண்ணம்மா தலையாட்டியதும் லட்சுமி பணத்தை வாங்கிக் கொண்டார்.

பாரதி வீட்டிற்கு கிளம்பியதும் கண்ணம்மா ஹேமாவை என் பொண்ணு என் பொண்ணு என கூறியதை நினைத்து சந்தோஷப்பட்டார். அது உங்க பொண்ணு தான் நீங்க தான் அதை ஏத்துக்க மாட்டிறீங்க. இந்த சந்தேக புத்தியால் என் வாழ்க்கையை கெடுத்து நீங்க மட்டும் என்ன வாழ்ந்து கிழிச்சிட்டீங்க அங்கேயும் ஒன்னும் இல்லை என கூறுகிறார். பாரதி எப்பயுமே திருந்தாத ஜென்மம் வகையை சார்ந்தவர் என கூறுகிறார்.

இந்தப் பக்கம் பாரதி ரூமிற்குள் இருக்கும்போது அஞ்சலி சென்று அவரிடம் நடந்ததற்கு மன்னிப்பு கேட்கிறார். நீ கண்ணம்மா வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்னு சொல்லி இருந்தா கூட நான் சரின்னு தான் சொல்லி இருப்பேன். நீ கர்ப்பமா இருக்கறதால நீ ஆசைப்பட்டத செய்யணும்னு நினைச்சிருப்பேன் என கூறுகிறார். உங்க வீட்டுக்கு போன பிறகுதான் எனக்கு உண்மை தெரிந்தது என கூறுகிறார். கண்ணம்மா வீட்டுக்குப் போனது இந்த வீட்டுல இருக்க எல்லாருக்கும் தெரியும் தானே எனக் கேட்க அஞ்சலி ஆமாம் என்று ஒப்புக் கொண்டார்.

இன்னொரு பக்கம் வெண்பாவும் சாந்தியும் கண்ணம்மாவை எப்படி வழிக்குக் கொண்டு வருவது பாரதிக்கு விவாகரத்து வாங்குவது என யோசித்துக் கொண்டு இருக்கின்றனர். சாந்தி பேசாம லக்ஷ்மியை தூக்கி மிரட்டி அவளிடம் காரியத்தை சாதித்து விடலாம் என கூறுகிறார். அதெல்லாம் பெரிய பிரச்சனையாகி விடும் என வெண்பா கூறுகிறார்.

கண்ணம்மா வீட்டில் போனை மறந்து வைத்துவிட்டு வந்த பாரதி.. வெண்பாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி

இந்த பக்கம் கண்ணம்மா பாரதி போனை மறந்து வைத்து விட்டு சென்றதை பார்க்கிறார். எப்படியும் போனை எடுத்துக் கொண்டு செல்ல திரும்பவும் வருவார் என நினைத்துக் கொண்டிருக்கிறார். மொபைல் டிஸ்ப்ளேவில் ஹேமாவின் புகைப்படம் இருப்பதை பார்த்து அந்த போட்டோவுக்கு முத்தம் கொடுக்கிறார். இந்த நேரத்தில் கண்ணம்மாவுக்கு ஒரு சந்தேகம். என்னுடைய பெயரை இவர் என்னனு பதிவு செய்து வைத்திருக்கிறார் என தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டுகிறார். உடனே தன்னுடைய போனில் இருந்து பாரதி போனுக்கு கால் செய்ய மகா நடிகை என வருகிறது. இதனால் கடுப்பான கண்ணம்மா போனை தூக்கி போட்டு உடைக்க முற்படும் போது மீண்டும் ஹேமாவின் போட்டோவை பார்த்து அந்த முயற்சியை கை விடுகிறார். நான் மகா நடிகையா எவ்வளவு கொழுப்பு இருக்கும். இத்தனை வருஷமா நடிச்சு ஏமாத்திட்டே இருக்க அந்த வெண்பா தான் மகா நடிகை. அதை கண்டுபிடிக்க துப்பில்ல இவரெல்லாம் ஒரு டாக்டர் என கூறுகிறார்.

இந்த பக்கம் வெண்பா பாரதி கூட போன் எடுக்க மாட்றான் என புலம்பிக் கொண்டிருக்க மீண்டும் ஒருமுறை முயற்சி செய்யலாம் என பாரதிக்கு போன் செய்கிறார். வெண்பா போன் செய்வதை பார்த்த கண்ணம்மா அவளை வெறுப்பேத்தலாம் என முடிவு செய்து போனை அட்டெண்ட் செய்து கண்ணம்மா பாரதி பேசுகிறேன் என கூறுகிறார். வெண்பாவுக்கு ஒரே ஷாக். பாரதியோட போன் உன்கிட்ட எப்படி வந்துச்சு என வெண்பா கேட்க ஆட்டோ பிடித்து வந்துச்சு என ஒரு வெறுப்பு ஏற்றுகிறார். மீண்டும் வெண்பா கேட்க புருஷன் போன் பொண்டாட்டி கிட்ட தானே இருக்கும் என கூறுகிறார். பாரதி பக்கத்துல இருக்கானா அவன்கிட்ட போனைக் கொடு என கூறுகிறார்.

அவர் பால் பாக்கெட் வாங்கிட்டு வர போயிருக்காரு.. நான் தான் காசு கொடுத்து அனுப்பி இருக்கேன் என கூறுகிறார். வெண்பாவுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. என்ன நடக்குது என தெரியாமல் புலம்புகிறார். பிறகு கண்ணம்மா அவர் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி இங்க வந்தாரு போனை மறந்து விட்டு போயிட்டாரு என கூறுகிறார். பிறகு வெண்பா போனை கட் செய்துவிட்டு என்ன கதை ட்ராக் மாறி போகிற மாதிரி இருக்கு. இல்ல நான் தோத்துட்டே வர்றேனா என யோசிக்கிறார். எங்க கோட்டை விட்ட என யோசிக்கிறார். இத்துடன் முடிகிறது இன்றைய பாரதிகண்ணம்மா சீரியல் எபிசோட்.