Bharathi Kannamma Episode Update 28.09.21

மாரடைப்பால் கண்ணம்மா மாமனார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Bharathi Kannamma Episode Update 28.09.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. நேற்று நெஞ்சு வலி வந்துவிடும் என கூறிய கண்ணம்மாவின் மாமனார் நெஞ்சு வலியால் துடிக்க அவரை அகிலன் மற்றும் சௌந்தர்யா மருத்துவமனையில் அனுமதிக்கின்றனர். அப்பாவை நன்கு பரிசோதனை செய்த பாரதி அவருக்கு ஒன்றும் இல்லை லேசான மாரடைப்பு ஏற்பட்டு இருக்கும் என கூறுகிறார்.

ஆனால் தனக்கு மாரடைப்பு அதிகமாக இருப்பதாகவும் எனக்கு ஏதாவது ஆகிவிடும் என பயமாக இருப்பதாகவும் கூறுகிறார் சௌந்தர்யாவின் கணவர். பாரதியை போலி டாக்டர் என்ன வேற ஏதாச்சு நல்ல டாக்டர்கிட்ட கூட்டிட்டு போ சௌந்தர்யா கூறுகிறார். அதன் பின்னர் மற்றவர்கள் அனைவருக்கும் தான் நடிப்பதாக கண்ணைக் காட்டிவிட்டு பாரதியிடம் நடிக்கிறார். மேலும் எனக்கு கடைசியாக தன்னுடைய மருமகள் கண்ணம்மாவை உடனே பார்க்க வேண்டும் என கூறுகிறார். இதனால் பாரதி கடுப்பாகிறார்.

மேலும் சௌந்தர்யா கண்ணம்மாவுக்கு போன் செய்து நாம் அவருக்கு நெஞ்சுவலி என கூற அவரும் பதறி அடித்துக் கொண்டு மருத்துவமனைக்கு வருகிறார். ஆட்டோவில் வரும் போது வெண்பா கண்ணம்மாவுக்கு போன் செய்கிறார். தன்னை மிஸ்டர் வெண்பா பாரதி எனக் கூற வைக்க போன் செய்கிறார். ஆனால் கண்ணம்மா கட் செய்ய மீண்டும் வெண்பா போன் செய்கிறார். போனை எடுத்து வெண்பாவை திட்டி விடுகிறார். ‌‌

நலம், வளம் எல்லாமே துளசிதான்ங்க. எப்டின்னா.!

சாப்பிடாம நடிக்கத் தொடங்கிவிட்டேன் ரொம்ப பசிக்குது என்று கூறுகிறார் சௌந்தர்யாவின் கணவர். பின்னர் அகிலன் கேண்டீனில் இருந்து முட்டை வாங்கி வந்து கொடுக்கிறார். இந்த நேரத்தில் பாரதி வந்துவிட என்ன ஹார்ட் அட்டாக்ல அப்பாவை ஆஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணிட்டு முட்டை போண்டா சாப்பிட்டு இருக்கீங்க திட்டி விட்டு என்னமோ பண்ணித் தொலைங்க என கூறிவிட்டு வெளியே கிளம்புகிறார். இந்த நேரத்தில் கண்ணம்மா மருத்துவமனைக்கு நுழைகிறார். பாரதியும் கண்ணம்மாவும் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்கின்றனர். இத்துடன் முடிகிறது இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்.

அசத்தலான சுவையில் Easy-யா செய்யலாம் மீன் வறுவல் | Fish Fry | Sea Food | Kalakkalcinema | Tamil HD