ஹேமாவை புது ஸ்கூலில் சேர்க்க பாரதி கிளம்ப சௌந்தர்யாவிற்கு கண்ணம்மா அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் கண்ணம்மா வீட்டுக்கு வர லட்சுமி சோகமாக இருக்க நடந்தது என்ன என கேட்க பாரதி அப்பா ஹேமா புது ஸ்கூல்ல சேர்க்க போறாரு நாளைக்கு டிசி வாங்க போறாராம் என அழுகிறாள்.. அதெல்லாம் நடக்காது ஹேமா இங்க தான் இருப்பா என கூறுகிறார்.

ஹேமாவை புது ஸ்கூலில் சேர்க்க கிளம்பும் பாரதி.. சௌந்தர்யாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி - பாரதி கண்ணம்மா இன்றைய முழு எபிசோட் அப்டேட்

இன்னொரு பக்கம் விக்ரம் மருத்துவமனையில் அமைச்சர் ஒருவர் அனுமதிக்கப்பட இருப்பதால் தீவிரவாதிகள் அவரை பணை கைதியாக பிடிக்க திட்டம் போடுகின்றனர்.

பிறகு பாரதி வீட்டில் உட்கார்ந்து கொண்டிருக்க அப்போது சௌந்தர்யா வந்து ஹேமாவ எதுக்கு புது ஸ்கூல்ல சேர்க்குற இந்த ஸ்கூல்லயே அவன் நல்லா தானே படிக்கிற என பேச பாரதி இந்த விஷயத்துல இன்னும் யாரும் எந்த டிராமாவும் போட வேண்டாம் நான் ஹேமா கிட்ட பேசிட்ட அவ சரின்னு சொல்லிட்டா என கூறுகிறார். பாரதி டீசி வாங்க ஸ்கூலுக்கு கிளம்ப அப்போது ஹேமா நானும் வரேன், என் பிரண்ட்ஸ் எல்லோரையும் பாக்கணும் என கூறுகிறார்.

பிறகு சௌந்தர்யா கண்ணம்மாவுக்கு போன் போட்டு நடந்த விஷயத்தை சொல்ல கண்ணம்மா நான் இப்போ ஸ்கூலுக்கு தான் போகிறேன் அவர் புது ஸ்கூல்ல சேர்க்க மாட்டாரு. வாங்குற டிசியை நீங்களே கிழிச்சு போட்டுடுவீங்கன்னு நான் அவர்கிட்ட சவால் விட்டு இருக்கேன் அப்படியே அவரு ஹேமாவ புது ஸ்கூல்ல சேர்த்தா நான் சும்மா இருக்க மாட்டேன். ஹேமாவிடம் நீ என்னுடைய பொண்ணு என்ற உண்மையை சொல்லி அவளை என்னுடன் கூட்டிட்டு வந்து விடுவேன் என சொல்ல சௌந்தர்யா அதிர்ச்சியடைகிறார்.

ஹேமாவை புது ஸ்கூலில் சேர்க்க கிளம்பும் பாரதி.. சௌந்தர்யாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி - பாரதி கண்ணம்மா இன்றைய முழு எபிசோட் அப்டேட்

அப்படியெல்லாம் எதுவும் பண்ணாத கொஞ்சம் பொறுமையா இரு என சொல்ல பயப்படாதீங்க அப்படி எதுவும் நடக்காது என கண்ணம்மா சொல்லி போனை வைக்கிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.