பாரதி அசிங்கப்படுத்தி அனுப்பிய நிலையில் கண்ணம்மா வீட்டுக்கு வந்த சௌந்தர்யாவை கண்டபடி விளாசியுள்ளார் கண்ணம்மா.

Bharathi Kannamma Episode Update 24.01.22 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. லட்சுமி அழைத்துக்கொண்டு ரோடு எல்லாம் கண்ணீர் விட்டு அழுது கொண்டே வீட்டிற்கு வருகிறார் கண்ணம்மா. லட்சுமி ஏன்மா அழுவற என கேட்டும் அதற்கு பதில் சொல்லாமல் அமைதியாகவே வருகிறார்.

அசிங்கப்படுத்திய பாரதி.‌. வீட்டுக்கு வந்த சௌந்தர்யாவை வெளுத்து வாங்கிய கண்ணம்மா - பாரதி கண்ணம்மா இன்றைய முழு எபிசோட் அப்டேட்

இந்த பக்கம் பாரதிகண்ணம்மா ஒன்றாக சேர்ந்து விட்டதை எண்ணி கடும் கோபத்தில் இருக்கிறார் வெண்பா. அந்த நேரத்தில் வீட்டுக்கு வந்த மாயாண்டி இருவருக்குமிடையே மீண்டும் சண்டை வெடித்தது. ரெண்டுபேரும் பிரிஞ்சிட்டாங்க. இனிமே ஒன்று சேர வாய்ப்பே கிடையாது என கூறுகிறார். இதனால் வெண்பா மகிழ்ச்சி அடைகிறார்.

இந்தப் பக்கம் வீட்டுக்கு வந்த கண்ணம்மா உன் அப்பாவை தான் பார்த்துட்டு வரேன் இனி அவர் நம்மகிட்ட வந்து சேர மாட்டார். அவருக்கு நம்பல பிடிக்கலைன்னு சொல்லிட்டாரு இனிமே அப்பா பத்தி பேசாத. நீ பெரிய பொண்ணு புரிஞ்சுக்கல நினைக்கிறேன் என கண்கலங்கி அழுகிறார். இதைக் கேட்டு கண்ணீர் விட்டு அழுத லட்சுமி இனிமே நான் அப்பா பத்தி கேட்க மாட்டேன் என கூறுகிறார். என்னையும் நீ அப்பாவைப் பார்க்க கூட்டிட்டு போய் இருக்கலாம் என சொல்கிறார். நான் வேணும்னா டாக்டர் அங்கிள் கிட்ட சொல்லி அப்பா கிட்ட சொல்லட்டுமா என சொல்ல அதெல்லாம் வேண்டாம் நம்ம பிரச்சனையே நாமலே பார்த்துக்கலாம் எனக் கூறுகிறார்.

இந்த பக்கம் பாரதி நான் என் மனசாட்சிப்படி சரியாகத்தான் நடந்து உள்ளேன் என சொல்லிக் கொள்கிறார். ‌‌அதன்பிறகு வீட்டுக்கு வந்த ஹேமா பாரதியிடம் கொஞ்சி விளையாடி இனிமே எனக்கு போக மாட்டீங்கனு சமையல் அம்மா சொன்னாங்க என கூறுகிறார். அவங்கள நீ எங்க பார்த்த எனக் கேட்க நானும் லஷ்மியும் பார்க்கிற்கு போயிருந்தோம் வர வழியில பார்த்தோம். அப்போ தான் இந்த விஷயத்தை சொல்லிட்டு லஷ்மியை கூட்டிட்டு போனாங்க என கூறுகிறார். இனிமே டாடி உன்னை பார்க் எல்லாம் கூட்டிட்டு போகிறேன் என பாரதி சொல்கிறார். அப்போது வந்த சௌந்தர்யா லட்சுமி எங்கே என கேட்க அவங்கள சமையல் அம்மா கூட்டிட்டு போயிட்டாங்க என கூறுகிறார். அவ ஒரு பைத்தியக்காரி என சௌந்தர்யா கிட்ட நீங்க தான் அவங்கள திட்டுனீங்களா? டல்லா கோபமாய் இருந்தாங்க என சொல்ல நான் எதுக்கு திட்ட போறேன் அவங்கள திட்டுறதுக்கு தான் நிறைய பேர் இருக்காங்களே என கூறுகிறார்.

அசிங்கப்படுத்திய பாரதி.‌. வீட்டுக்கு வந்த சௌந்தர்யாவை வெளுத்து வாங்கிய கண்ணம்மா - பாரதி கண்ணம்மா இன்றைய முழு எபிசோட் அப்டேட்

பிறகு கண்ணம்மா வீட்டில் அமர்ந்து கொண்டிருக்க அந்த நேரத்தில் வீட்டிற்குள் வருகிறார் சௌந்தர்யா. அப்போது இங்க எதுக்கு வந்திங்க இருக்கேனா? செத்துட்டேனானு? பார்க்க வந்தீங்களா என கோபப்படுகிறார் கண்ணம்மா. அப்படியெல்லாம் சாக மாட்டேன். கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம பேசுங்க மகன் உயிரோடு இருக்கும்போது நான் எதுக்கு சாகணும் என கூறுகிறார்.

அத்தனை பேர் முன்னாடி அவ்வளவு அசிங்கமாக பேசும் போது எல்லாரும் நின்னு வேடிக்கை தானே பார்த்தீங்க? உங்க பையன் பேசுனதுனால ஒரு வார்த்தை கூட நீங்க பேசலயே. அந்த இடத்தில் இருந்த எங்கப்பா எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பாரு என கண்ணம்மா கூறுகிறார். நான் எப்பவும் உன் பக்கம் தானே இருக்கிறேன் என சௌந்தர்யா சொல்ல அப்ப இங்கயா ஒரு வார்த்தை கூட பேசாமல் நின்னீங்க என கேட்கிறார். இத்துடன் இன்றைய பாரதிகண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது. ‌‌