பாரதிக்கு மீண்டும் ஞாபகம் வந்து போக கடைசியில் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. விறுவிறுப்பாக இறுதி கட்டத்தை நோக்கி பயணித்து வரும் இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கோவிலில் கண்ணம்மா விளக்கு போட்டதை பார்த்து பாரதிக்கு பழைய நினைவுகள் வர தனக்கு பழைய நினைவுகள் மீண்டும் வந்து விட்டதாக கண்ணம்மாவை கட்டி அணைத்துக் கொண்டு சந்தோஷப்படும் பாரதி திடீரென மயங்கி விழுகிறார்.

பாரதிக்கு மீண்டும் வந்த ஞாபகங்கள்.‌. கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி - பாரதி கண்ணம்மா இன்றைய முழு எபிசோட் அப்டேட்

பிறகு பாரதியை வீட்டுக்கு கூட்டி வந்து படுக்க வைத்து விட்டு அனைவரும் பகருகின்றனர். டாக்டருக்கு போன் செய்து நடந்த விஷயங்களை சொல்ல இது சாதாரணமா நடக்கிற விஷயம் தான் திரும்பவும் அவரை எழுப்பி உங்களை நீங்களே அறிமுகப்படுத்திக் கொண்டு மீண்டும் இதே முயற்சியை தொடருங்கள் பாரதிக்கு எப்போது மயக்கம் வராமல் இருக்கிறதோ அப்போதுதான் அவருடைய நினைவுகள் முழுமையாக மீண்டும் வந்ததாக அர்த்தம் என கூறுகிறார்.

இந்த பக்கம் கண்ணம்மா குழந்தைகளிடம் நடந்த விஷயத்தை சொல்ல தாமரை பாரதி உன்னால எவ்வளவு காதல் வைத்திருக்கிறார் என்று பாரு என சொல்ல, கண்ணம்மா அவருக்கு என்ன மட்டும் வேணா ஞாபகம் இருக்கலாம் எனக்கு என்னுடைய வாழ்க்கையில் அவள் செய்த விஷயங்கள் தான் ஞாபகம் இருக்கிறது என சொல்லி வருத்தப்பட்டு உள்ளே சென்று விடுகிறார்.

அடுத்து பாரதிக்கு மீண்டும் நினைவுகளை கொண்டு வர என்ன செய்வது என யோசிக்க கண்ணம்மா நான் சொல்ற இடத்துக்கு நீங்க கூட்டிட்டு வாங்க மத்தத நான் பார்த்துக்கிறேன் என சொல்ல அதேபோல் பாரதியை ஒரு இடத்திற்கு கூட்டாக அங்கு கண்ணம்மா பாரதி கதையின் கண்ணம்மா என்ற பாடலைப் பாட பாரதிக்கு மீண்டும் பழைய நினைவுகள் வரத் தொடங்கி யார் இந்த பாடலை பாடுவது என தேடி அலைகிறார்.

பாரதிக்கு மீண்டும் வந்த ஞாபகங்கள்.‌. கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி - பாரதி கண்ணம்மா இன்றைய முழு எபிசோட் அப்டேட்

பிறகு கண்ணம்மாவை பார்த்து என்னுடைய காதலி கண்ணம்மா நீ தானே என கேட்க கண்ணம்மா ஆமாம் என சொல்ல பிறகு பாரதியும் அதே பாடலை பாடி மயங்கி விழுகிறார். இதனால் மீண்டும் அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.