பாரதியை மீட்டெடுக்க டாக்டர் உதவி கேட்க கண்ணம்மா அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பிரபலமான செய்திகள் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கண்ணம்மாவை கூட்டிச்சென்று நிறுத்தி இது யார் என்ன தெரிகிறதா என கேட்க பாரதி தெரியவில்லை என சொல்லி அதிர்ச்சி கொடுக்கிறார். அடுத்து இந்த குழந்தைங்க ரெண்டு பேரையும் தெரியுதா என கேட்க பாரதி அகிலன் அஞ்சலியை பார்த்து உங்க குழந்தையா என கேட்க ஹேமா, லட்சுமி என இருவரும் கதறி அழுகின்றனர்.

பாரதியை மீட்டெடுக்க டாக்டர் சொன்ன வழி.. கண்ணம்மா கொடுத்த அதிர்ச்சி - பாரதி கண்ணம்மா இன்றைய முழு எபிசோட் அப்டேட்

அடுத்து பாரதி எனக்கு எதுவும் ஞாபகம் வரல தலை வலிக்குது என்ன சொல்ல டாக்டர் நீங்க ரெஸ்ட் எடுங்க என சொல்லி எல்லோரையும் வெளியே அழைத்து வந்து பேசுகிறார். அப்போது பாரதிக்கு எதுவும் ஞாபகத்தில் இல்லை, ஆனால் அவருடைய ஆழ்மனதில் கண்ணம்மா என்ற பெயர் மட்டும் பதிந்து போய் உள்ளது அதை வைத்து தான் நினைவுகளை மீட்டெடுக்க வேண்டும். அதற்காக கண்ணம்மாவின் உதவி தேவைப்படுகிறது.

பாரதியுடன் சேர்ந்து வாழ நினைவுகளை மீண்டும் ரி கிரியேட் செய்ய வேண்டும், அதற்காக கண்ணம்மா பாரதியுடன் இருக்க வேண்டும் அவருடன் அன்பாக பேசி பழையபடி வாழ வேண்டும் என சொல்ல என்னை நினைத்துக்கொண்டு இருக்கிறீர்கள் எல்லோரும் மருந்து மாத்திரை மூலமாக குணப்படுத்த பாருங்க யார் என்ன சொன்னாலும் என்னால இதெல்லாம் பண்ண முடியாது என சொல்லி குழந்தைகளை கூட்டிக்கொண்டு அங்கிருந்து கிளம்பி வந்து விடுகிறார்.

அடுத்து டாக்டர் இவங்க எல்லாம் உங்களுடைய குடும்ப உறுப்பினர்கள் என ஒவ்வொருத்தராக அறிமுகம் செய்து வைக்க சௌந்தர்யா அம்மாதான் பெத்த பிள்ளைக்கு எல்லோரையும் அறிமுகம் செய்து வைப்பாங்க ஆனா இப்போ உனக்கு அம்மாவையே அறிமுகம் செய்து வைக்கிற நிலைமை வந்துடுச்சு என அழ பாரதி நீங்கதான் என் மனச சொல்றாங்க நீங்க அழுவாதீங்க. நீங்க அழுதா எனக்கு பின்பக்கம் வலிக்குது என சொல்ல சௌந்தர்யா நான் அழவில்லை என சொல்கிறார். பாரதி உங்கள நான் அம்மானு கூப்பிடலாமா எனக்கு கேட்க அதற்குத்தான் ஏங்கிட்டு இருக்கேன் கூப்பிடு என சௌந்தர்யா சொல்ல பாரதி அம்மா என கூப்பிடுகிறார்.

பாரதியை மீட்டெடுக்க டாக்டர் சொன்ன வழி.. கண்ணம்மா கொடுத்த அதிர்ச்சி - பாரதி கண்ணம்மா இன்றைய முழு எபிசோட் அப்டேட்

அடுத்ததாக பாரதியை டிஸ்சார்ஜ் செய்து கண்ணம்மா இருக்கும் ஊருக்கு அழைத்து வருகின்றனர். எல்லோரும் பாரதியை நலம் விசாரிக்க பாரதி எதுவும் தெரியாமல் குழந்தை போல நிற்க அனைவரும் வருத்தப்படுகின்றனர். வீட்டு வாசலில் நின்று பாரதியின் நிலைமையை பார்த்து கண்ணீர் விடுகிறார் கண்ணம்மா. இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.