ஆபரேஷன் முடிந்து வீட்டுக்கு வந்த கண்ணம்மாவுக்கு பெரிய அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது.

Bharathi Kannamma Episode Update 19.05.22 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோட்டில் ஹேமாவும் லட்சுமி விளையாடிக் கொண்டு சண்டை போட்டுக் கொண்டிருக்க அப்போது வந்த அகிலன் என்ன விளையாட்டு என கேட்க ஹேமா ஒற்றை காலில் பத்து எண்ணும் வரை இருக்க வேண்டும் என சொல்கிறார். அகிலனின் போட்டியில் கலந்துகொள்ள கடைசியில் ஹேமாவிடம் தோற்றுப் போகிறார். இப்படி கலகலவென பேசிக்கொண்டிருக்க லட்சுமி ஊரில் இருக்கும்போது தீபாவளிக்கு அம்மா எல்லோருக்கும் துணி தைத்து கொடுப்பாங்க அதில் மீதி இருக்கும் துணிகளை வைத்து எனக்கு கவுன் தைத்து கொடுப்பாங்க என கூற இதைக்கேட்டு எல்லோரும் வருத்தப்படுகின்றனர்.

ஆபரேஷன் முடிந்து வீட்டுக்கு வந்த கண்ணம்மாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. வெண்பாவின் அம்மா எடுத்த முடிவு - பாரதிகண்ணம்மா இன்றைய முழு எபிசோட் அப்டேட்

இந்த பக்கம் விக்ரம் பாரதிகண்ணம்மா என இருவரையும் ஆபரேஷன் வெற்றிகரமாக நடத்தி முடித்ததற்காக பாராட்டுகிறார். கண்ணம்மாவை இதுக்கப்புறம் சாப்பிடாமல் வேலை செய்யக்கூடாது ஒழுங்காக சாப்பிடுங்க பாரதி திரும்பவும் கோபப்படும் படி நடந்து கொள்ளாதீர்கள் என சொல்கிறார். பிறகு கண்ணம்மா வீட்டுக்கு கிளம்ப அந்த நேரத்தில் சௌந்தர்யா போன் செய்து கண்ணம்மாவுக்கு பாராட்டு தெரிவிக்கிறார் அப்படியே ஒவ்வொருத்தராக பேசி பாராட்டு கூறுகின்றனர்.

இந்த பக்கம் ஷர்மிளா போனில் யாரோ ஒருவரிடம் மாப்பிள்ளை என பேசிக் கொண்டிருக்கிறார் இதை ஒட்டுக்கேட்ட சாந்தி அப்படியே இருந்தாலும் உங்க அம்மா உங்களுக்கு மாப்பிள்ளை பார்த்து இருக்காங்க நாளைக்கு அவங்க வரப்போறாங்க என சொல்ல இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த வெண்பா எனக்கே தெரியாமல் மாப்பிள்ளை பார்க்குறாங்க யாருன்னு வரட்டும் வந்து பார்க்கட்டும் என கோபத்தோடு பேசுகிறார்.

ஆபரேஷன் முடிந்து வீட்டுக்கு வந்த கண்ணம்மாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. வெண்பாவின் அம்மா எடுத்த முடிவு - பாரதிகண்ணம்மா இன்றைய முழு எபிசோட் அப்டேட்

பின்னர் வீட்டுக்கு வந்த கண்ணம்மா துணிகளை மடித்து வைத்துக் கொண்டிருக்க அப்போது லட்சுமி துணியை எடுத்து பார்க்கும் போது அதிலிருந்து பாரதியின் பெயர் பலகை கீழே விழுகிறது. இது எப்படி மிக வந்துச்சு ஹாஸ்பிடல் போகும்போது எடுத்துட்டு வந்து விட்டாளா என நினைத்து பார்க்க அந்த பெயர் பலகையில் மேலே ஐ லவ் யூ அப்பா என எழுதி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய பாரதிகண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.