மேடையில் வைத்து மாப்பிள்ளையை அறிமுகப்படுத்தியுள்ளார் ஷர்மிளா.

சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் ஷர்மிலா ஏற்பாடு செய்திருந்த பங்ஷனுக்கு எக்கச்சக்கமான விருந்தினர்கள் வரத் தொடங்கியுள்ளனர். வெண்பா வெறுப்பில் வெந்து கொண்டிருக்க அந்த நேரத்தில் உள்ளே வந்த கண்ணம்மா என்பது அருகே வர உன்னை யாரு இந்த வர சொன்னது என கூச்சலிட என் தம்பி ரோஹித் சாரதி தான் அழைச்சாறு என கூறுகிறார். அதுமட்டுமில்லாமல் ஆன்ட்டி ஷர்மிளா போன் பண்ணு கூப்பிட்டாங்க என கூற இந்த நேரத்தில் ஷர்மிளா கண்ணம்மாவை கட்டியணைத்து முத்தமிட்டு வரவேற்க வெண்பா வெறுப்பாகிறார்.

மேடையில் வைத்து மாப்பிள்ளையை அறிமுகப்படுத்திய ஷர்மிளா.. வெண்பாவை வெறுப்பேற்றிய சௌந்தர்யா குடும்பம் - பாரதி கண்ணம்மா இன்றைய முழு எபிசோட் அப்டேட்

அவரைத் தொடர்ந்து சௌந்தர்யா தன்னுடைய கணவர் மற்றும் அகிலனுடன் வருகை தந்து என்னை வெறுப்படையச் செய்கிறாள். உனக்காக நான் கோவிலுக்கு போய்ட்டு அர்ச்சனை பண்ணிட்டு வந்தேன் என பணத்தை கொடுக்கிறார். என் பிள்ளைக்குக் கல்யாணம் ஆகி குழந்தை பிறந்து ஹை ஸ்கூல் போகிற அளவிற்கு வளர்ந்துடுச்சு, ஆனா இந்த பொண்ணுக்கு ஒரு கல்யாணம் ஆகலையே என கஷ்டமா இருந்துச்சு இப்போ தான் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு என கூறுகிறார். பிறகு சர்மிளா இவர்களை வரவேற்று உள்ளே அழைத்துச் செல்கிறார்.

பிறகு ஷர்மிளா வெண்பாவை மேடைக்கு அழைத்து பிறகு உங்களுக்கு முக்கியமான நபரைப் அறிமுகம் செய்யப் போவதாக சொல்ல அந்த நேரத்தில் பாரதி என்ட்ரி கொடுக்க வெண்பா சந்தோஷப்படுகிறார். ஆனால் சர்மிளா நான் சொன்ன முக்கியமான நபர் இவர் ( பாரதி ) இல்லை என சொல்லி ரோகித் சாரதியை வரவேற்கிறார். பிறகு இவர்தான் தன்னுடைய மாப்பிள்ளை என அனைவருக்கும் அறிமுகம் செய்கிறார். அடுத்த வாரம் அமெரிக்கா போகப் போகிறேன் போயிட்டு வந்ததும் இவர்களுக்கு திருமணம் என அறிவிக்கிறார். பிறகு ரோஹித் சாரதியை பேசச் சொல்கிறார். அவர் நானும் அத்தையும் அழைத்து வந்த அனைவருக்கும் ரொம்ப நன்றி என கூறுகிறார். வாழ்க்கையிலேயே எனக்கு ரொம்ப சந்தோசமான நாள் இது என தெரிவிக்கிறார்.

மேடையில் வைத்து மாப்பிள்ளையை அறிமுகப்படுத்திய ஷர்மிளா.. வெண்பாவை வெறுப்பேற்றிய சௌந்தர்யா குடும்பம் - பாரதி கண்ணம்மா இன்றைய முழு எபிசோட் அப்டேட்

இதையெல்லாம் கேட்டு கண்ணம்மா, சௌந்தர்யா என எல்லோரும் சந்தோஷப்பட வெண்பா பயங்கர கடுப்பில் இருக்கிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.