கண்ணம்மா வீட்டுக்கு அழைத்துச் சென்ற அகிலனிடம் கண்ணம்மா ஹேமா பற்றி கேட்கிறார்.

Bharathi Kannamma Episode Update 15.09.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. கண்ணமா வீட்டிற்கு ஹேமாவை அழைத்துச் செல்கிறார் அகிலன். அங்கு போனதும் ஹேமா பாரதி எடுத்துக் கொடுத்த ஆடையை எடுத்து கொடுக்கிறார். அதன் பின்னர் இருவரும் டிரஸ் போட்டு பார்ப்பதற்காக உள்ளே செல்கின்றனர். கண்ணம்மா அகிலனிடம் ஹேமா யார் எனக் கேட்கிறார். நீயாவது உண்மையை சொல் என கூறுகிறார்.

ஹேமா வீட்டுக்குச் சென்ற கண்ணம்மா.. அகிலனிடம் கண்ணம்மா கேட்ட கேள்வி - பாரதி கண்ணம்மா இன்றைய எபிசோட் அப்டேட்.!!

அகிலனும் சமாளித்துக்கொண்டு ஹேமாவை தத்தெடுத்து தான் வந்தோம் என கூறுகிறார். டிரஸ்சை மாற்றிக் கொண்டு வந்த இருவரும் கண்ணம்மாவிடம் காண்பிக்கின்றனர். பார்ப்பதற்கு இருவரும் ட்வின்ஸ் மாதிரியே இருப்பதாக லட்சுமி கூறுகிறார். அதன் பின்னர் லட்சுமி கண்ணம்மாவை அம்மா என கூப்பிட ஹேமா ஷாக் ஆகிறார்.

பின்னர் நீ ஏன் அம்மான்னு கூப்பிட்ட என கேட்க கண்ணம்மா லட்சுமி என்னுடைய சொந்த மகள் என கூறுகிறார். அவ கலெக்டர் ஆனால்தான் என்ன அம்மான்னு கூப்பிடணும் அதுவரைக்கும் சமமானது தான் சொல்லணும் என நான் தான் சொன்னேன் என சொல்கிறார்.

வீட்டிற்கு வந்த ஹேமா நடந்ததைப் பற்றி சௌந்தர்யாவிடம் கூட அவர்கள் இதை முதல் முறையாக கேட்பது போல ஆச்சரியப்படுகின்றனர். அதன் பின்னர் அகிலன் ஹேமாவை பிரியும்போது கண்ணம்மா அண்ணி முகத்தில் ஏககம் தான் தெரிந்தது. இதனால் சௌந்தர்யா கொஞ்ச நாளைக்கு ஹேமாவை கண்ணம்மா வீட்டுக்கு போக விடாமல் பார்த்துக்கணும் என கூறுகிறார். இத்துடன் முடிகிறது இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்.