விடுதலையாகி ஹாஸ்பிடல் வந்துள்ளார் செல்வம்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் ஹேமா லட்சுமி இடம் நேற்றிலிருந்து நீங்கதான் இருக்க உனக்கு பயமா இல்லையா என கேட்க முதலில் பயமா இருந்துச்சு அழுகையா வந்துச்சு என கூறுகிறார். பிறகு நீ எதுக்கு இங்க வந்த என்ன பாரதி கேட்க எனக்கு பிடிச்ச டாடி சித்தப்பா சித்தி சமையல் அம்மா லட்சுமி எல்லோரும் இங்கே இருக்கும்போது நான் மட்டும் எப்படி வெளியே இருப்பேன் அதனாலதான் வந்தேன் என கூறுகிறார். உனக்கு பயமா இல்லையா என பாரதி கேட்க நீங்க எல்லோரும் இருக்கும் போது எனக்கு என்ன பயம் என ஹேமா கூறுகிறாள்.

கர்ப்பமான வெண்பா? ஹாஸ்பிடல் வந்த செல்வத்தால் கண்ணம்மாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி - பாரதி கண்ணம்மா இன்றைய எபிசோட் அப்டேட்

இந்த பக்கம் வெண்பா மயக்கம் வந்து வாந்தி எடுக்க உடனே சாந்தி இன்பாவின் கையைப் பிடித்து இரட்டை நாடி துடிக்குது நீங்க கர்ப்பமாக இருக்கீங்க என சொல்ல தூக்கத்திலிருந்து அலறி விழுந்து கனவு என புரிந்து கொள்கிறார். அதன் பிறகு சரியாக இந்த நேரத்தில் ரோகித் அங்கு வந்து வெண்பாவை நீ கண்ட கனவு என்னன்னு நான் சொல்லட்டுமா என நடந்ததை அப்படியே சொல்லி அவளுக்கு அதிர்ச்சி கொடுக்குறான்.

அதன் பிறகு தீவிரவாதிகள் தரப்பு இன்னும் ஒரு மணி நேரத்தில் செல்வத்தை ரிலீஸ் செய்தால் 10 வெளிய அனுப்புவதாக சொல்லி இருந்த நிலையில் போலீசும் செல்வத்தை ரிலீஸ் செய்ய நடவடிக்கை எடுத்து அவரை ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் செல்ல இது பிரேக்கிங் நியூஸ் ஆக செய்தி சேனல்களில் ஒளிபரப்பாகிறது. முதலில் 10 பேரை வெளியே அனுப்பிவிட்டு அதன் பிறகு செல்வத்தை உள்ளே அழைத்துக்கொள் என போலீஸ்காரருக்கு செல்ல முதலில் மறுத்த தீவிரவாதிகள் அதற்கு ஓகே சொல்லுகின்றனர்.

கர்ப்பமான வெண்பா? ஹாஸ்பிடல் வந்த செல்வத்தால் கண்ணம்மாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி - பாரதி கண்ணம்மா இன்றைய எபிசோட் அப்டேட்

அடுத்ததாக போலீஸ் செல்வத்தை அழைத்து வந்து ஹாஸ்பிடல் வெளியே நிறுத்த தீவிரவாதிகள் உள்ளே இருந்து 10 பேரை வெளியே அனுப்பி பிறகு செல்வத்தை உள்ளே அழைத்துக் கொள்கின்றனர். செல்வம் உள்ளே போனதும் தீவிரவாதிகள் அவரை வரவேற்கின்றனர். நம்முடைய சகோதர்கள் 20 பேரை விடுதலை செய்ய சொல்லி கேட்டு இருக்கேன் என தீவிரவாத தலைவர் செல்வத்திடம் கூறுகிறார். அடுத்து உள்ளவங்க உங்களுக்கு இன்னும் நிறைய சர்ப்ரைஸ் இருக்கு என அழைத்துச் செல்ல அங்கு பாரதி கண்ணம்மா செல்வத்தை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்.