வெண்பா ஸ்கூல் பொறுப்பை ஏற்க பாரதி விட்ட சவாலால் ஷாக் ஆகி உள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாரதி கண்ணம்மா 2. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் கண்ணம்மா மதுவுடன் ஸ்கூலுக்கு வந்து சௌந்தர்யாவை பார்த்து மீண்டும் வேலையில் சேர வந்திருப்பதாக சொல்ல நடந்தது நடந்து போச்சு என் பையனுக்காக தான் திரும்பவும் உனக்கு வேலை போட்டு கொடுத்து இருக்கேன் என சொல்கிறார்.

அது மட்டும் இல்லாமல் ஹாஸ்டல் பற்றி அதிகாரி கேட்ட கேள்விக்கு நீதான் டக்கு டக்குனு பதில் சொன்னியாமே?பாரதி சொன்னான் அதனாலதான் அப்ரூவல் கிடைத்தது என்று சொன்னான். அதுக்காகத்தான் இதுவே முக்கியமா திரும்ப கொடுத்தேன் என கூறுகிறார்.

பிறகு சௌந்தர்யா கிளம்பி சென்றதும் செல்வம் வெண்பா பாரதியோட போஸ்டிங்குங்கு வந்திருக்காங்க, போகும்போது ஒரு வணக்கத்தை போட்டுட்டு போயிடுங்க, அப்புறம் அதுக்கு வேற ஏதாவது பிரச்சனை பண்ண போகுது என சொல்ல கண்ணம்மா நான் பாத்துக்குறேன் என கூறுகிறார்.

அடுத்து வெண்பா நினைச்சதை நடத்தியாச்சு என சந்தோஷமாக இருக்க கண்ணம்மா உள்ளே வருகிறார். இருவரும் நடந்த விஷயங்களை பற்றி பேசிக் கொண்டிருக்க கண்ணம்மா நான் கூட பசி மயக்கத்தில் தூங்கிட்டேன்னு தான் நினைச்சேன் ஆனா இன்னைக்கு காலையில தான் அதுக்கு பின்னாடி ஏதோ சதி நடந்து இருக்குன்னு புரிஞ்சுகிட்டேன். வாட்டர் பாட்டல்ல ஏதோ மருந்து வாசனை வந்தது, அப்புறம் தான் தெரிஞ்சது யாரோ தூக்க மாத்திரை கலந்து இருக்காங்க என சொல்ல வெண்பா முகம் மாறுகிறது.

மேலும் அது யாரோ எல்லாம் கிடையாது நீ தான் என்பது உன் முகம் போற போக்க பார்த்தாலே தெரியுது என கண்ணம்மா சொல்கிறார். நான் இங்க போஸ்டிங் வாங்கி வந்திருக்குது உன்ன இந்த ஸ்கூல்ல விட்டு தொறத்தணும்னு தான் வந்திருக்கிறேன் என வெண்பா சொல்ல கண்ணம்மா உன்ன சுத்தி ரெண்டு பேர் இருக்கும்போது என்ன சுத்தி நிறைய நல்லவங்க இருக்காங்க சௌந்தர்யா மேடம் இருக்காங்க பாரதி இருக்கான் என சொல்லி வெறுப்பேற்றுகிறார்.

அடுத்து இன்னொரு முறை இப்படி ஏதாவது வேலைய பண்ணா இந்த கண்ணம்மா சும்மா இருக்க மாட்டா என எச்சரித்து விட்டு கண்ணம்மா அங்கிருந்து கிளம்புகிறார். வெளியே வந்த கண்ணம்மா பாரதியை தேட மது அது பற்றி பேசிக் கொண்டிருக்க கண்ணம்மாவின் கையில் ரத்தம் கசிவதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்.

பிறகு மது கண்ணம்மாவை ஸ்கூலில் உள்ள ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் செல்கிறார். அங்கே கண்ணம்மா கட்டை பிரித்தால் அது வெட்டு காயம் என தெரிந்துவிடும் என பயந்து நடுங்க அந்த நேரத்தில் பாரதி வர மது பாரதியை கூப்பிடுகிறார். பிறகு டாக்டர் கட்டை பிரித்து மருந்து போட பாரதி அதை பார்த்து என்னால தான் இப்படி ஆனது என வருத்தப்படுகிறார். மது காயத்தை பார்த்து வெட்டுக்காயம் போல இருக்கு என்ன ஏது என கேட்க பாரதி மற்றும் கண்ணம்மா என இருவரும் ஆப்பிள் கட் பண்ணும் போது வெட்டிக் கொண்டதாக சொல்லி சமாளிக்கின்றனர். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோடு முடிவடைகிறது.