பாரதிக்கு வெண்பா கொடுத்த கிஃப்ட்டால் சௌந்தர்யா அதிர்ச்சி அடைந்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஜெயிலர் மேடம் இருவரும் ஒருவர் மீது ஒருவர் காட்டும் கோபம், கவனிப்பு இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது இரண்டு பேருக்கும் இடையே காதல் இருப்பது தெரிகிறது என சொல்ல இருவரும் காதலா? அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது என பேசுகின்றனர்.

அதன் பிறகு பாரதி மாத்திரை வாங்கப் போனதும் கண்ணம்மா பாரதிக்கு உண்மை தெரிந்தால் என்ன ஆகிறது என பேச அவர்களை ஜெயில் பிடித்து போட்டாச்சு இப்போதைக்கு உனக்கு எந்த பிரச்சனையும் இல்லை, கிடைச்சிருக்க புது வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்கிற வழியை பாரு உனக்கு என்ன தேவையாக இருந்தாலும் எனக்கு போன் பண்ணு ஒரு அம்மாவாக இருந்து உதவி பண்ண நான் தயாராக இருக்கிறேன் என சொல்ல கண்ணம்மா கண்ணீர் விட்டு நன்றி சொல்கிறார்.

பிறகு பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் ஊருக்கு கிளம்புகின்றனர். கையில் அடிபட்ட காரணத்தினால் கண்ணம்மா வண்டியில் ஏற முடியாமல் தவிக்க பாரதி கை கொடுத்து ஏற்றி விடுகிறார். பிறகு சீட்டு பெல்ட் போட்டு விடுகிறார். போகும்போது இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு உனக்குள்ள இப்படி நல்ல மனசு இருக்கா என நினைத்துக் கொள்கின்றனர்.

அடுத்து கண்ணம்மா பாரதிக்கு நன்றி சொல்ல பாரதி எதுக்கு என கேட்க எல்லாத்துக்கும் என சொல்கிறார். எல்லாத்துக்கும் என்றால் என்ன புரியல என பாரதி கேட்க தன்னை ரவுடிகளிடம் இருந்து காப்பாற்றியதற்கு, காவல் காத்ததுக்கும் நன்றி சொல்கிறார். அடுத்து பாரதியும் கண்ணம்மாவுக்கு நன்றி சொல்ல அவர் எதுக்கு என கேட்க ரவுடிகளிடம் இருந்து தன்னை காப்பாற்றியதற்கும், அதனுடன் வந்து தனது ஸ்கூல் வேலையை முடித்து அப்ரூவல் வாங்க உதவி செய்ததற்கு என சொல்கிறார்.

பிறகு இருவரும் ஊருக்கு வந்து இறங்க கண்ணம்மா அடிபட்ட விஷயம் யாருக்கும் சொல்ல வேண்டாம், நான் வீட்டில் வேறு யாரையாவது சொல்லி சமாளித்துக் கொள்கிறேன் என சொல்கிறார். வீட்டில் என்ன ஆச்சு எனக்கு வண்டி பஞ்சர் ஆகி டயர் மாற்றும்போது ஜாக்கி கையில் கிழித்து விட்டதாக சொல்கிறார்.

அடுத்து கண்ணம்மா அம்மாவுடன் பேசிக்கொண்டு இருக்க சண்முக வாத்தியார் வெற்றி பெற்று ரெஸ்ட் எடு என சொல்கிறார். மேலும் சாந்தியை சுடுதண்ணி போட்டு தர சொல்லி கூறுகிறார். மறுபக்கம் பாரதி வீட்டுக்கு வந்து சௌந்தர்யாவிடம் பேசிக் கொண்டிருக்க அப்போது அங்கு வந்த செல்வம் கண்ணம்மாவுக்கு அடிபட்ட விஷயம் பற்றி கேட்க இதை அறிந்த சௌந்தர்யா கண்ணம்மாவுக்கு போன் போட்டு நலம் விசாரிக்கிறார்.

அடுத்து அங்கு வரும் வெண்பா பாரதிக்கு ஹாய் சொல்லி உனக்கு ஒரு கிப்ட் வாங்கி வந்திருப்பதாக சொல்லி சரக்கு பாட்டிலை கொடுக்க சௌந்தர்யா அதிர்ச்சி அடைகிறார். வெண்பாவின் அப்பா எதை குடுக்கணும்னு தெரியலயா என திட்ட நண்பா யாருக்கு எது பிடிக்குமோ அதுதான் கொடுத்து இருக்கேன் என சொல்கிறார்.

அடுத்து வெளியான ப்ரோமோ வீடியோவில் வெண்பா கண்ணம்மாவிடம் வம்பிழுக்க கண்ணம்மா பளாரென கன்னத்தில் அறைகிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.