பாரதியை ரூமில் வைத்து பூட்டி உள்ளார் கண்ணம்மா.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா சீசன் 2. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் சௌந்தர்யா கண்ணம்மாவிடம் ஏன் உனக்கு திடீர்னு மயக்கம் வந்தது என்ன ஆச்சு உனக்கு என்ன பிரச்சனை என கேட்க சின்ன வயசுல இருந்தே இப்படித்தான் ஒரு ரூமில் தனியாக இருந்தால் இப்படி மயங்கி விழுந்து விடுவேன்.

அதுவும் அந்த ரூமில் யாராவது ஆண்கள் இருந்தால் இன்னும் பயந்து போய் மூச்சு திணறி கீழே விழுந்து விடுவேன் என சொல்ல பாரதி நல்ல வேலை நம்மள காட்டி கொடுக்கல என நிம்மதி அடைகிறார்.

அதன் பிறகு கண்ணம்மா மதுவிடம் நடந்த விஷயத்தை சொல்ல மது நான் இப்பவே பாரதியிடம் போய் ஏன்டா இப்படி பண்ணனு கேட்கிறேன் என சொல்ல இதுல நீ தலையிடாதே பாரதியை எப்படி திருத்தணும்னு எனக்கு தெரியும் என சொல்லி தன்னுடைய திட்டத்தை சொல்கிறார் கண்ணம்மா.

பிறகு பாரதி அவரது கேபினில் இருக்க கண்ணம்மா கையில் போனில் கேமராவை ஆன் செய்து கொண்டு உள்ளே சென்று பாரதியிடம் உன்னை காப்பாற்றியதற்காக ஒரு தேங்க்ஸ் கூட சொல்ல மாட்டியா என கேட்க பாரதி தேங்க்ஸ் சொல்ல கண்ணம்மா அறிவுரை வழங்க பாரதி கடுப்பாகிறார். தேவையில்லாம அட்வைஸ் பண்ணிட்டு இருக்காத அப்புறம் திரும்பவும் சிகரெட் புகையை உன் முகத்தில் ஊதுவேன் என சொல்ல கண்ணம்மா அங்கிருந்து வெளியே வந்து கதவை சாத்தி பூட்டுகிறார்.

பிறகு ஜன்னல் வழியாக இருந்து அந்த வீடியோவை காட்டி இன்னைக்கு சாயங்காலம் வரைக்கும் நீங்க ரூமுக்குள் தான் இருக்கணும். சத்தம் ஏதாவது போட்ட இந்த வீடியோவை உங்க அம்மா கிட்ட காட்டிடுவேன் என மிரட்டுகிறார். வெளியே வரும்போது கண்ணம்மா பாரதியின் சிகரெட் மொபைல் போன் என எல்லாவற்றையும் வெளியே எடுத்து வந்து விட்டதால் பாரதி எதுவும் இல்லாமல் உள்ளே அமைதியாக உட்கார்ந்து இருக்கிறார்.

பிறகு கிளாஸ் முடித்து விட்டு கண்ணம்மா கீழே வர சண்முக வாத்தியார் சரி வா போகலாம் காலைல ஏதோ கோபத்துல வர வேண்டாம்னு சொல்லிட்டு வந்தேன் என சொல்ல கண்ணம்மா இல்ல நீங்க போங்கப்பா நான் வரேன்னு சொல்ல சண்முக வாத்தியார் உனக்கு அவ்வளவு ஈகோ இருக்கா என மனதுக்குள் நினைத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்புகிறார்.

அதன்பிறகு கண்ணம்மா பாரதியின் ரூம் கதவை திறந்து உள்ளே செல்ல பாரதி கண்டபடி சத்தம் போட்டு கண்ணம்மாவை அடிக்க வருகிறார். பிறகு கண்ணம்மா கோபத்தை எல்லாம் கொட்டி தீர்த்துட்டியா உன்னால சிகரெட் பிடிக்காமல் இருக்க முடியும் என்பதை உனக்கு காட்டத்தான் இப்படி செய்தேன். கிட்டத்தட்ட 5 மணி நேரம் நீ சிகரெட் பிடிக்காமல் இருந்திருக்க என சொல்கிறார்.

பிறகு கண்ணம்மா அங்கிருந்து வீட்டுக்கு கிளம்ப பாரதி கண்ணம்மா செய்த விஷயத்தால் அப்சட்டாக இருக்கிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.