Bhagyalakshmi Serial Episode Update 11.09.21

ஜெனி கர்ப்பமானதை வீட்டுக்கு தெரியாமல் மறைக்கிறார் செழியன்.

Bhagyalakshmi Serial Episode Update 11.09.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் நாளுக்கு நாள் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

விநாயகர் எடுத்த 12 அவதாரங்கள்.!

செழியனின் மனைவி ஜெனி கர்ப்பமாகி உள்ளார். காலையில் எழுந்ததும் அவருக்கு ஒரே வாந்தியும் மயக்கமும் ஆக இருக்கிறது. செழியன் ஃபுட் பாய்சன் ஆகியிருக்கும் மருத்துவமனைக்கு செல்லலாம் என கூறுகிறார். ஜெனி எனக்கு டேட் தள்ளிப் போய் இருக்கு. நான் அத கவனிக்கல. ஒருவேளை இது கர்ப்பமாக இருக்கும் என சந்தேகப்படுகிறார். இதனையடுத்து செழியன் பிரக்னன்சி டெஸ்ட் கிட் வாங்கி வருகிறார்.

ஆறுமாசம் கழிச்சு வச்சு செய்யுங்க! – Actor Vijay Antony Emotional Speech | Kodiyil Oruvan Press Meet

இதனையடுத்து செழியன் அதை வாங்கி வந்து ஜெனி கர்ப்பமாக இருப்பதாக காட்டுகிறது. இதனை வீட்டிற்கு சொல்லாமல் மறைத்து விடுமாறு செழியன் கூறுகிறார். இப்போதைக்கு குழந்தை வேணாம் நான்கைந்து வருடம் போகட்டும் என கூறுகிறார். ஜெனி இதனால் கண் கலங்கி வருத்தப்படுகிறார்.

பாக்யா என்னாச்சு ஏதாச்சு என வந்து கேட்டதும் ஆபீஸ்ல ஏதோ சாப்பிட்டு ஃபுட் பாய்சன் ஆயிடுச்சு என கூறுகிறார். இதனையடுத்து பாக்யாவின் மாமனார் வாந்தி நிற்பதற்காக மோரில் உப்பு கலந்து கொடுக்க சொல்கிறார். பாக்யாவும் அதை அப்படியே கொடுக்கிறார்.

வீட்டில் வேலை செய்யும் செல்வி ஜெனியின் முகம் 3 நாளா பளபளப்பா இருந்துச்சு. உண்டாகி இருக்க வாய்ப்பு இருக்கு என கூறுகிறார். ஜெனிக்கு சொல்ல தெரியாமல் இருக்கும் என கூறுகிறார். ஆனால் பாக்கியா எதையாவது ஒன்னு சந்தேகப்பட்டு பேசிட்டு இருக்காத என செல்வியை திட்டி விடுகிறார்.

இத்துடன் முடிகிறது இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட்.