பீஸ்ட் படத்திற்கும் சிம்புவுக்கும் தொடர்பு இருப்பதாக சமூகவலைதளங்களில் பேசி வருகின்றனர்.

Beast Vs Vettai Mannan : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ள திரைப்படம் மாஸ்டர். இந்தப் படத்தைத் தொடர்ந்து தற்போது பீஸ்ட் என்ற படத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடித்து வருகிறார்.

இப்படத்தினை நெல்சன் திலீப்குமார் இயக்க அனிருத் இசை அமைக்கிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய் பிறந்தநாள் விருந்தாக வெளியானது. கையில் துப்பாக்கியுடன் தளபதி விஜய் மாஸ் ஆக இருந்தார்.

தரவரிசைப் பட்டியலில் ஆல்ரவுண்டர் புஜாரா நம்பர் ஒன் : ஐசிசி அறிவிப்பு

இதனை பார்த்த ரசிகர்கள் இப்படத்திற்கு சிம்பு படத்திற்கும் தொடர்பு இருப்பதாக கூறி வருகின்றனர். அதாவது நெல்சன் முதல் முறையாக சிம்புவை வைத்து வேட்டை மன்னன் என்ற படத்தை இயக்க இருந்தார். அந்தப் படத்தில் சிம்புவுடன் கையில் துப்பாக்கியுடன் இருக்கும் பர்ஸ்ட் லுக் வெளியானது.

சிறப்பான செயல்…, நான் மகிழ்ச்சி அடைகிறேன் – ரசிகர்களுக்கு நன்றி சொன்ன தளபதி Vijay..! | Latest News

இதனால் இரண்டு படக்கதைக்கும் தொடர்பு இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். உண்மை என்ன என்பது படக்குழு விளக்கம் அளித்தால் தான் தெரியும்.