பீஸ்ட் படத்துடன் மோதப்போகும் இரண்டு திரைப்படங்கள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

Beast Clashes With 2 Movies : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பு சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க விஜய்யின் தங்கையாக அபர்ணா தாஸ் நடித்துள்ளார். மேலும் செல்வராகவன் வில்லனாக நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் பல முன்னணி நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

இந்த படத்தின் சென்சார் முடிவடைந்து படத்திற்கு யுஏ சான்றிதழ் கிடைத்த நிலையில் படம் ஏப்ரல் 13-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியானது.

மேலும் இந்த படத்தோடு கே ஜி எஃப் 2 திரைப்படமும் மோத உள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இந்த படம் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இதை இரண்டு படங்கள் மட்டும் அல்லாமல் பாலிவுட் சினிமாவில் ஷாகித் கபூர் நடிப்பில் உருவாகியுள்ள ஜெஸ்ஸி என்ற திரைப்படமும் போட்டியில் களம் இறங்குவதாக தகவல் கிடைத்துள்ளது.

இந்த மூன்று பெரிய படங்களில் மக்களின் மனதைக் கவர்ந்து வெற்றி பெறப் போவது எது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.