Badminton Match Start Today : Sports News, World Cup 2019, Latest Sports News, India, Sports, Latest Sports News, PV.Sindhu

Badminton Match Start Today :

பி.வி.சிந்து ‘பை’ சலுகை மூலம் நேரடியாக 2-வது சுற்றில் கால்பதிக்கிறார். 2-வது சுற்றில் அவர் பாய் யூபோ (சீனதைபே) அல்லது லின்டா ஜெட்சிரி (பல்கேரியா) ஆகியோரில் ஒருவரை சந்திப்பார்.

24 வயதான சிந்து கூறுகையில், ‘இந்த போட்டிக்காக நான் கடினமாக உழைத்திருக்கிறேன். நிச்சயம் சிறப்பாக செயல்படுவேன் என்று நம்புகிறேன். ஆனால் நெருக்கடி இல்லை’ என்றார்.

உலக பேட்மிண்டனில் ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் வென்று இருக்கும் மற்றொரு இந்திய வீராங்கனை சாய்னா நேவாலும் நேரடியாக 2-வது சுற்றில் விளையாட இருக்கிறார்.

எல்லா தடைகளையும் வெற்றிகரமாக கடந்தால் சாய்னாவும், சிந்துவும் அரைஇறுதியில் நேருக்கு நேர் சந்திக்க நேரிடும். இவர்களுக்கு நம்பர் ஒன் புயல்’ அகானே யமாகுச்சி (ஜப்பான்), தாய் ஜூ யிங் (சீனதைபே), ஒகுஹரா (ஜப்பான்), சென் யூபே (சீனா) உள்ளிட்டோர் கடும் போட்டி அளிக்க காத்திருக்கிறார்கள்.

நீங்கள் எப்போதும் ஹெட்போன் பயன்படுத்துகிறீர்களா? அதன் ஆபத்து, தெரியுமா உங்களுக்கு?

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ‘நம்பர் ஒன்’ வீரர் ஜப்பானின் கென்டோ மோமோட்டா பட்டம் வெல்வதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

இந்திய தரப்பில் ஸ்ரீகாந்த், சமீர் வர்மா, சாய் பிரனீத் ஆகியோர் களம் காணுகிறார்கள். இவர்களில் 10-ம் நிலை வீரரான ஸ்ரீகாந்த் தனது முதல் சுற்றில் அயர்லாந்து வீரர் நாட் நுயேனுடன் சவாலை தொடங்குகிறார்.

சமீபத்தில் தாய்லாந்து ஓபன் ஆண்கள் இரட்டையர் பட்டத்தை கைப்பற்றி வரலாறு படைத்த இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி காயம் காரணமாக விலகி விட்டது. அதே சமயம் பெண்கள் இரட்டையரில் அஸ்வினி-சிக்கி ரெட்டி உள்பட 3 இந்திய ஜோடி கலந்து கொள்கிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.