பாக்கியாவிற்கு சர்ப்ரைஸ் கொடுத்த பிள்ளைகள், கோபி கொடுத்த கிப்ட், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

பாக்கியாவிற்கு பிள்ளைகள் சர்ப்ரைஸ் கொடுக்க, கோபி கிப்ட் கொடுத்துள்ளார்.

BaakiyaLakshmi Serial Today Episode Update 25-02-25
BaakiyaLakshmi Serial Today Episode Update 25-02-25

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் இனியா மற்றும் ஆகாஷ் இருவரும் பேசிக்கொண்ட நடந்து வர நாளைக்கு ஆண்டி பர்த்டேக்கு என்ன சர்ப்ரைஸ் வச்சிருக்க என்று கேட்க அவங்க கூட வேலை செஞ்சவங்க அம்மாவுக்கு தெரிஞ்சவங்க என எல்லாரையும் பேச வச்சு வீடியோ ரெடி பண்ணி இருக்க ஆனா இன்னும் எடிட்டிங் பண்ணல நீ செல்வி ஆன்ட்டி பேசுறது வீடியோ எடுத்து எனக்கு எடிட் பண்ணி கொடுக்கணும் என்று சொல்ல கண்டிப்பா செய்றேன் என சொல்லுகிறார் நீயும் நாளைக்கு வருவல்ல என்று கேட்க கண்டிப்பா வரேன்னு சொல்லுகிறார்.

பிறகு பாக்யா மற்றும் இனியா தூங்கிக் கொண்டிருக்க இனியாவிற்கு ஃபோன் வருகிறது. அண்ணன் போன் பண்ணி இருக்கு என எடுத்து பார்த்துவிட்டு இன்றைக்கு பிறந்தநாள் விஷ் பண்ணும் இல்ல என நினைத்து கீழே இறங்கி வந்து கதவை திறக்க எழில் மற்றும் செழியன் இருவரும் கேக்குடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். சாரி அண்ணா முழிச்சிருக்கணும்னு நினைச்சேன் தூங்கிட்டேன் என்று சொல்ல சரி நீ போய் பாட்டியை எழுப்பு நான் கேக் எடுத்துட்டு வரேன் என்று சொல்ல செழியன் நான் போய் அப்பாவை எழுப்புறேன் என்று சொல்லுகிறார் முதலில் மறுத்த எழில் பிறகு சம்மதிக்கிறார்.

அனைவரும் ஒன்றாக சென்று பாக்யாவை எழுப்பி வாழ்த்து சொல்லி கேக் வெட்ட சொல்லுகின்றனர். கேக் வெட்டும் சமயத்தில் கோபி வெளியில் இருக்க செழியன் அவரையும் ரூமுக்குள் அழைத்து வருகிறார் பிறகு பாக்கியா கேக் வெட்டி அனைவருக்கும் ஊட்டி விடுகிறார். மறுநாள் காலையில் வீட்டில் ஈஸ்வரி பூஜை செய்து பாக்கியாவிற்கு பொட்டு வைத்து விடுகிறார். பாக்யா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க ஈஸ்வரி பணம் கொடுக்கிறார். அந்த நேரம் பார்த்து செல்வி வர என்ன இன்னைக்கும் லேட்டா என்று ஈஸ்வரி கேட்க இன்னைக்கு அக்காவோட பிறந்தநாள் அதனால் கோவிலில் அர்ச்சனை பண்ணிட்டு வந்தேன் என்று சொல்லி விபூதி கொடுக்கிறார்.பாக்யாவும் வைத்துக்கொள்ள ஈஸ்வரி இனியாவிற்கு கொடுத்து வைத்துக் கொள்கின்றனர். கொஞ்ச நேரத்தில், ஈஸ்வரி நானும் உனக்கு ஒரு பெரிய சர்ப்ரைஸ் வச்சிருக்கேன் என்று சொல்ல இனியாவும் நானும் ஒரு சர்ப்ரைஸ் வச்சிருக்கேன் என்று இருவரும் சொல்லுகின்றனர்.

பாக்கியா என்ன சர்ப்ரைஸ் என்று கேட்க இருவரும் சொல்ல மறுக்கின்றனர் பிறகு நான் சமைக்க போறேன் என்று சொல்ல கோபி எதிரில் வந்து நின்று பாக்யாவிற்கு வாழ்த்து சொல்லி கிப்ட் கொடுக்கிறார். பாக்யாவும் வாங்கிக் கொள்ள இனியா என்ன கிப்ட் என்று நான் போய் பார்க்கவா என்று சொல்ல ஈஸ்வரி வேண்டாம் உங்க அம்மா பாக்கட்டும் நீ ஏதோ செயின் கேட்டல நான் எடுத்து தரேன் என்று சொல்லுகிறார். செல்வி கிச்சனில் பாக்யாவுடன் வேலை பார்த்துக் கொண்டிருக்க அதில் என்ன கிப்ட் இருக்கும் என்பதை பார்க்க ஆவலாக இருக்க பாக்யா பார்க்காமல் இருக்கிறார். என்ன இருக்குன்னு பாருக்கா என்று சொல்ல என்ன இருந்தால் நமக்கு என்ன விடு சொல்லுகிறார். கண்ணு முன்னாடி கிப்ட் வச்சுட்டு பிரிச்சு பாக்கல நான் எப்படி பிரிச்சு பாரு என்று சொல்ல இப்போ உனக்கு கண்ணு முன்னாடி இருக்கிறது தான் பிரச்சனையா என்று சொல்லி கோபி வாங்கி கொடுத்த கிப்ட் செல்பில் வைத்து மூடி விடுகிறார்.

மறுபக்கம் பாக்கியா புடவை கட்டி மேக்கப் போட்டு பிறந்தநாள் கொண்டாட தயாராக ஜெனி மற்றும் அமிர்தா இருவரும் வந்து கட்டிப்பிடித்து வாழ்த்து சொல்லி முத்தம் கொடுக்கின்றனர் அழகா இருக்கீங்க ஆன்ட்டி என்று சொல்ல பாக்யா சந்தோஷப்படுகிறார். பிறகு அவர்கள் பாக்கியாவை அழைத்து வர ஒருவராக வந்து பாக்யாவைக்கு கிப்ட் கொடுக்கின்றனர். ராதிகாவும் பொக்கே உடன் வந்து வாழ்த்து சொல்லுகிறார். பிறகு குடும்பத்தில் இருக்கும் அனைவரிடமும் நலம் விசாரித்துவிட்டு அனைவரும் கேக் வெட்ட வருகின்றனர். கேக் வெட்டிய பிறகு செழியன் பாக்யாவிடம் மைக் கொடுத்து பேச சொல்லுகிறார்.

பாக்கியா என்ன பேசுகிறார்? ராதிகா என்ன சொல்லுகிறார்? கோபி ராதிகாவிடம் என்ன பேசுகிறார்? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

BaakiyaLakshmi Serial Today Episode Update 25-02-25
BaakiyaLakshmi Serial Today Episode Update 25-02-25