Web Ads

பிரைம் வீடியோ தனது தமிழ் ஒரிஜினல் தொடரான சுழல்-தி வோர்டெக்ஸ் சீசன் 2 இசை ஆல்பத்தை வெளியிட்டது

சாம் CS இசையமைப்பில் உருவான இந்த ஆல்பம், கபில் கபிலன், அந்தோனி தாசன் மற்றும் திவாகர் போன்ற அசாதாரணமான குரல் வளத்துடன் கூடிய பாடகர்களால் உயிரூட்டப்பட்டிருப்பதை பறைசாற்றுகிறது.

Music Album of Suzhal-The Vortex Season 2
Music Album of Suzhal-The Vortex Season 2

18 அசல் பாடல்கள் அடங்கிய இந்த இசை ஆல்பம் அனைத்து முன்னணி இசை ஸ்ட்ரீமிங் தளங்களிலும் இப்போது ஒலிபரப்பப்படுகிறதுமும்பை, இந்தியா, பிப்ரவரி 24, 2025 —இந்தியாவில் மிகவும் அதிகளவில் விரும்பப்படும் பொழுதுபோக்கு தளமான பிரைம் வீடியோ, பெரிதும் பாராட்டப்பட்ட அதன் தமிழ் ஒரிஜினல் தொடரான சுழல் – தி வோர்டெக்ஸ் சீசன் 2 தொடரின் மர்மம் நிறைந்த காட்சிகளை பார்வையாளர்கள் கண்டு ரசித்து மகிழும் அனுபவத்தை தீவிரப்படுத்தும் வகையில் மிக அற்புதமாக உருவாக்கப்பட்ட 18 பாடல்கள் அடங்கிய சீசன் இரண்டின் இசை ஆல்பத்தை இன்று வெளியிட்டது. காளிபட்டணத்தின் பெரும் புதிரான சமூகக் கட்டமைப்பை சீர்குலைத்து பாதிப்பை விளைவிக்கக் கூடிய ஒரு ஒரு மரணத்தை மையமாகக் கொண்ட மனதை திடுக்கிடச்செய்து பதைபதைக்க வைக்கும் இந்த சஸ்பென்ஸ் த்ரில்லரின் , இரண்டாவது சீசன், அதன் மர்மத்தை விடுவிக்கும் அதே வேளையில் அதன் அடி ஆழத்தில் மறைந்திருக்கும் சமூகத்தின் கண்ணுக்குப் புலப்படாத பிளவுகளை வெளிக்கொண்டுவருகிறது. . சூழல் – தி வோர்டெக்ஸ் சீசன் 2 திரைப்படத்தின் முழுமையான இசை தொகுப்பை இப்போது அமேசான் மியூசிக், ஸ்பாட்டிஃபை, ஆப்பிள் மியூசிக், யூடியூப் மியூசிக் மற்றும் ஜியோ-சாவன் உள்ளிட்ட அனைத்து முன்னணி இசை ஸ்ட்ரீமிங் தளங்களிலும் கேட்டு மகிழலாம் .

ஆழமான பல்வேறு பொருள் பொதிந்த பாடல் வரிகளை விவேகாவுடன் இணைந்து சாம் CS,(Sam CS), எழுதி உருவாக்கிய இந்த இசைக் கோர்வை இதயத் துடிப்பை நின்றுபோகச் செய்யும் தொடரின் ஒவ்வொரு காட்சியின் சாராம்சத்தையும் மனதைக் கொள்ளைகொள்ளும் வகையில் அப்படியே முழுமையாக வழங்குகிறது. திறமையான இதர மற்ற பாடகர்களுக்கு மத்தியில் சாம் சிஎஸ், கபில் கபிலன், ஆண்டனி தாசன் மற்றும் திவாகர் உள்ளிட்ட அசாதாரண குரல் வளம் கொண்ட மாபெரும் பாடல் கலைஞர்களின் குரலில் பாடல் வரிகளும் இசையும் உயிர்பெற்று எழுகின்றன

“இந்தத் திரைப்படத்தின் கதைமாந்தர்களைப் போலவே இதன் இசையும், பின்னணி குரலும் தொடருடன் ஒன்றிணைந்த ஓர் அங்கமாக திகழ்கிறது மேலும் அது காட்சி மற்றும் கதையோட்டத்துக்கு வலுச் சேர்ப்பதோடு மட்டுமல்லாமல், காட்சியின் ஒவ்வொரு நுணுக்கமான உணர்வு பூர்வமான அம்சத்துக்கும் உயிரோட்டம் கொடுத்து கதையை வண்ணமயமாக்குகிறது. முதல் சீசனுக்குப் பிறகு, இரண்டாவது சீசனுக்கு உயிரூட்டும் இசையை உருவாக்கி வழங்கிய சாம் சி எஸ், சரியான மிகச் சிறந்த தேர்வாக அமைந்துள்ளார் என்பதே எங்கள் கருத்து. கதையுடன் உணர்வு பூர்வமாக ஒன்றி பின்னிப்பிணைந்த வகையில் உருவாக்கப்பட்ட இந்தக் இசைக் கோர்வை கதைக்கு உயிரோட்டமளிப்பதில் இசையின் மாபெரும் பங்களிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது, மேலும் சுழல் – தி வோர்டெக்ஸ் உலகின் ஒவ்வொரு அம்சத்திலும் பார்வையாளர்கள் தங்கள் மனதை பறிகொடுத்து ஆழ்ந்து போகப்போவதை காண நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்,” என்று தொடரை தயாரித்த வால்வாட்சர் பிலிம்ஸ் நிறுவனத்தின் எழுத்தாளர்கள், படைப்பாளிகள் மற்றும் தயாரிப்பாளர்களான புஷ்கர் மற்றும் காயத்ரி கூறினார்கள்.

Music Album of Suzhal-The Vortex Season 2
Music Album of Suzhal-The Vortex Season 2

இந்த தொடருக்கான இசையமைப்பு குறித்து தன் எண்ணங்களை பகிர்ந்து கொண்ட இசையமைப்பாளர், பாடகர் மற்றும் பாடலாசிரியர் சாம் CS, கூறினார் “சஸ்பென்ஸ் த்ரில்லரின் கதையோட்டத்துக்கு இசை அளிக்கும் முக்கிய பங்கு குறித்து மிக ஆழமாகப் புரிந்துகொண்ட மேதைகளான இரட்டையர்கள் புஷ்கர் மற்றும் காயத்ரி ஆகியோரால் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட சுழல் – தி வோர்டெக்ஸ் கதைக் களமானது நுண்ணிய உணர்ச்சிகளின் சிக்கலான ஒரு கலவையாகும். அவர்களின் கதைகளில், பின்னணி இசை கிட்டத்தட்ட ஒரு கதை மாந்தரைப் போலவே உருவெடுத்து, கதையை முன்னோக்கி செலுத்துகிறது. அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் பணியாற்றி , அவர்களின் தனித்துவமான கதைசொல்லலில் என்னை நானே ஆழ்ந்து போகச்செய்தது தொடருக்கான பின்னணி இசையையும் பாடல் இசைத் தொகுப்பையும் உருவாக்குவதில் எனக்கு பெருமளவு உதவியது. இரண்டாவது சீசனின் ஒரு அங்கமாக செயல்பட்டதில் நான் மிக மகிழ்ச்சியடைகிறேன், மேலும் பார்வையாளர்கள் தொடரை அனுபவித்து மகிழ்வதை போன்ற அதே உணர்வுடன் இசையையும் ரசித்து மகிழ்வார்கள் என்று நான் நம்புகிறேன்.”

இந்த ஆல்பத்தில் அடங்கியுள்ள பாடல்களின் பட்டியல் இங்கே:

1. ஆலங்கட்டி மழை (சாம் CS உருவாக்கி இசையமைத்த பாடல் வரிகளை கபில் கபிலன் பாடியுள்ளார்)
2. ஆம்பூர் தம் பிரியாணி (விவேகாவின் பாடல் வரிகளுக்கு சாம் CS இசை அமைக்க, பாடலுக்கு ஆண்டனி தாசன் குரல் கொடுத்துள்ளார்)
3. சாயா கோபுரமே (விவேகாவின் பாடல் வரிகளுக்கு சாம் CS இசை அமைத்து குரல் கொடுத்துள்ளார்)
4. சில்லா சில்லா (விவேகாவின் பாடல் வரிகளுக்கு சாம் CS இசை அமைத்து குரல் கொடுத்துள்ளார்)
5. அஷ்டகாளி (சாம் CS பாடல் வரிகளை எழுதி இசையமைத்து, திவாகருடன் இணைந்து குரல் கொடுத்துள்ளார்)
6. அரக்கன் அரங்கேற்றம் (பாடல் வரிகளை விவேகா எழுத சாம் CS இசையமைத்து பாடியுள்ளார்)
7. சூரசம்ஹாரம் (பாடல் வரிகளை விவேகா எழுத சாம் CSஇசையமைத்து பாடியுள்ளார்)
8. நாககன்னி பாடல் (பாடல் வரிகளை சாம் CS எழுதி இசையமைத்து பாடியுள்ளார்)
9. மாடனே சுடலை மாடனே (பாடல் வரிகளை சாம் CS எழுதி இசையமைத்து பாடியுள்ளார்)
10. தி சேஸ்
11. தி கமென்ஸ்மெண்ட்
12. தி ஜெனிசிஸ்
13. தி லாங்கிங்
14. தி பெனிட்டென்ஷியரி
15. தி ரெடீமர்
16. தி சால்வேஷன்
17. தி சீக்ரெட்
18. தி டன்னல்

புஷ்கர் (Pushkar) மற்றும் காயத்ரி (Gayatri) ஆகியோரின் எழுத்தில் வால்வாட்சர் பிலிம்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு, பிரம்மா (Bramma) மற்றும் சர்ஜுன் KM (Sarjun KM) இயக்கத்தில் உருவான இந்தத் தொடரில், கதிர் (Kathir) மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் (Aishwarya Rajesh) மீண்டும் முன்னணி வேடங்களில் தோன்றி நடிக்க லால் Lal, சரவணன் Saravanan, கௌரி கிஷன் Gouri Kishan (முத்து), சம்யுக்தா விஸ்வநாதன் Samyuktha Vishwanathan (நாச்சி), மோனிஷா பிளெஸ்ஸி Monisha Blessy (முப்பி), ரினி Rini (காந்தாரி), ஷ்ரிஷாShrisha (வீரா), அபிராமி போஸ் Abhirami Bose (செண்பகம்), நிகிலா சங்கர் Nikhila Sankar (சந்தனம்), கலைவாணி பாஸ்கர்Kalaivani Bhaskar (உலகு), மற்றும் அஸ்வினி நம்பியார் Ashwini Nambiar ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க மஞ்சிமா மோகன் Manjima Mohanமற்றும் கயல் சந்திரன் Kayal Chandran ஆகியோர் கௌரவ வேடங்களில் தோன்றுகின்றனர். சுழல்—தி வோர்டெக்ஸ் சீசன் 2 இந்தியா மற்றும் உலகம் முழுவதும் 240 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ஆங்கில வசனங்களுடன் பிரைம் வீடியோவில் பிப்ரவரி 28 அன்று பிரத்தியேகமாக ஒளிபரப்பாக உள்ளது.

Music Album of Suzhal-The Vortex Season 2
Music Album of Suzhal-The Vortex Season 2