Pushpa 2

பாக்யாவை திட்டிய செழியன், இனியா,.. உண்மையை உடைத்த செல்வி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்..!

பாக்யாவை செழியன் மற்றும் இனியா இருவரும் திட்டியுள்ளனர்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ஜெனி, செழியன், இனியா, ஈஸ்வரி என நால்வரும் உட்கார்ந்து கொண்டிருக்க பாக்யாவும் செல்வியும் வருகின்றனர். நடந்த விஷயங்களை ஈஸ்வரி அவர்களிடம் சொல்லி இருக்க செழியன் அப்பா தான் அப்படி பண்ணாரு உனக்கு முதலிய தெரியும்மாமா என்று கேட்க தெரியும் என்று சொல்ல ஏமா சொல்லல என்று செழியன் கேட்கிறார். சொல்லியிருந்தா என்ன பண்ணி இருப்பீங்க எதுவும் பண்ணி இருக்க முடியாது இல்ல அதனால தான் சொல்லல என்று சொல்லுகிறார் பாக்யா. இனியா அப்பா செஞ்சது தப்புதான் பெரிய தப்புதான் நான் இல்லைன்னு சொல்லல ஆனா நீ பண்ணதும் தப்புதான பூஜைக்கு வரல என்று சொல்ல பாக்யா எனக்கு வேலை இருந்துச்சு என்று சொல்லுகிறார். உடனே இனியாவும் நீங்க பண்ணதும் தப்புதான் என்று பேச செல்வி கோபமடைந்து பூஜைக்கு அக்கா போச்சு எழில் தம்பி தான் உள்ள விடலை என்ற உண்மையை சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். உண்மையா மா என்று செழியன் கேட்க ஆமா நான் போன கோயிலுக்கு போயிட்டு ஆசையா விபூதி வச்சுட்டு உள்ள போலாம்னு போகும்போது நீ உள்ள வந்தா இந்த படம் நடக்காதும்மான்னு சொன்னா நான் எப்படி உள்ள போக முடியும் அதையும் மீறி நான் உள்ள போகணுமா என்று கேட்க அனைவரும் கண்கலங்குகின்றனர். இருந்தாலும் எனக்கு வெளியே போகவும் மனசு இல்ல அவன் பேசி முடிக்கிற வரைக்கும் நான் வெளியே தான் நின்னுட்டு இருந்தேன் என்று சொல்லுகிறார்.

BaakiyaLakshmi Serial Today Episode Update
BaakiyaLakshmi Serial Today Episode Update

ஈஸ்வரி மீண்டும் கேள்வி கேட்க நேத்து நான் கொஞ்சமா தான் சாப்பிட்டேன் எனக்கு ரொம்ப பசிக்குது டயர்டா இருக்கு நான் போய் பிரஷர் ஆயிட்டு சமைக்கிறேன் என்று மேலே சென்ற பாக்யா, பிரஷப்பான பிறகு சமைத்து செல்விக்கு கொடுத்த விட அவரும் தட்டில் எடுத்துக்கொண்டு உட்கார்ந்து சாப்பிடுகிறார் உடனே ஈஸ்வரி மீண்டும் வந்து எழில் அப்படி சொன்னானா என்று கேட்க அவன் அப்படிதான் அத்தை சொன்னா எத்தனை வாட்டி கேட்டாலும் இருக்கிற உண்மை அதுதான் என்று சொல்லுகிறார். உடனே செழியன் எங்ககிட்ட சொல்லியிருந்தா நான் உன்னை உள்ள கூட்டிட்டு வந்து இருப்பேன் இல்லம்மா என்று சொல்ல அவனுக்கே விருப்பம் இல்லாத போது நீங்க கூப்பிட்டு வந்து நான் எப்படி நிற்க முடியும் என்று கேட்டுவிட்டு எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு நான் தூங்கவே இல்லை நேத்து நைட்டு இன்னைக்கு போய் தூங்குறேன் என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார். மறுபக்கம் வர அமிர்தா காத்துக் கொண்டிருக்கிறார் பிறகு நடந்த விஷயங்களை எழில் சொன்னவுடன் அமிர்தா அதிர்ச்சியாகி நிற்கிறார். இது மட்டும் இல்லாமல் அவரோட வாய்ப்புள்ள கிடைச்ச இந்த படத்தை நான் பண்ண போறது கிடையாது என்று சொல்ல, இந்த முடிவை நீங்க ரொம்ப லேட்டா எடுத்து இருக்கீங்க என்று அமிதா சொல்லுகிறார். உங்களுக்கு நல்ல படம் கிடைக்கும் எழில் என்று சொல்ல எனக்கு படம் பண்ணலனாலும் பரவாயில்லை என்று எதுவும் சொல்லுகிறார்.

மறுநாள் காலையில் பாக்யா ஈஸ்வரி மற்றும் இனியாவிற்கு காபி கொடுத்துவிட்டு நல்லா தூங்கிட்ட அத்தை இனியா வந்தது கூட தெரியல காலைல எழுந்து பார்த்தால் 100 ,150 மெசேஜ் வந்திருக்கு ஸ்வீட்ஸ் எல்லாம் சூப்பரா இருக்கு இனிமேட்டு இருந்த நாங்க உங்ககிட்ட தான் வாங்குவோம்னு போட்டு இருக்காங்க ரொம்ப சந்தோஷமா இருக்கு என்று பேசிக் கொண்டிருக்க செல்வி வருகிறார். பிறகு செல்வியுடன் கிச்சனில் வேலை பார்த்துக் கொண்டிருக்க செல்வி பாக்யாவிடம் கோபி சார் அரெஸ்ட் பண்ணி இருப்பாங்களா மாட்டாங்களா என்று கேட்க எனக்கு தெரியாது நான் கம்ப்ளைன்ட் பண்ணிட்டேன் நடக்கிறது நடக்கட்டும் வேலையை பார்க்கலாம் என்று சொல்ல உன்ன மாதிரி பொறுமையா என்னால் இருக்க முடியல கா என்று சொல்லுகிறார்.

பிறகு என்ன நடக்கப்போகிறது?கோபி என்ன செய்யப் போகிறார்? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்

BaakiyaLakshmi Serial Today Episode Update
BaakiyaLakshmi Serial Today Episode Update