கங்குவா படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? அப்டேட் இதோ.!
கங்குவா படத்தின் இரண்டு நாள் வசூல் கிடைக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் கங்குவா என்ற திரைப்படம் நவம்பர் 14ஆம் தேதி குழந்தைகள் தினத்தன்று வெளியானது.
சிறுத்தை சிவா இயக்கத்திலும், ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பிலும், உருவான இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். மேலும் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, நட்டி நடராஜன், கருணாஸ் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களை கவரவில்லை என்றே சொல்லலாம். எதிர்பார்த்த அளவிற்கு இந்தப் படத்தில் எதுவும் இல்லை என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இரண்டு நாட்களில் இந்த திரைப்படம் உலக அளவில் 60 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.