இதை யாரும் எதிர்பார்க்கல..கங்குவாவை ஓரம் கட்டிய அமரன்..
கங்குவா திரைப்படத்தை ஓரம் கட்டியுள்ளது அமரன் திரைப்படம்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் நவம்பர் 14ஆம் தேதி கங்குவா என்ற திரைப்படம் வெளியானது. பிரம்மாண்டமாக உருவான இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.
ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு இந்த படம் பெரியதாக அமையவில்லை. இந்தப் படத்தின் பட்ஜெட் சுமார் 300 கோடி என்றும் இதுவே சூர்யாவின் அதிகபட்ச பட்ஜெட்டில் உருவான திரைப்படம் என்றும் சொல்லப்படுகிறது.
இந்தத் திரைப்படம் கவனம் ஈர்க்காக காரணத்தினால், சமீபத்தில் தீபாவளி அன்று அமரன் திரைப்படம் வெளியானது. ஏற்கனவே வசூலில் இந்த திரைப்படம் மாஸ் காட்டி வரும் நிலையில் கங்குவா வெளியாகியும் இந்த படத்திற்கான கூட்டம் இன்னும் குறையாமல் இருந்து வருகிறது
இதனால் எதிர்மறை விமர்சனங்களால் கங்குவாவிற்கு திரையரங்குகள் காட்சி குறைக்கப்பட்டு, அமரன் படத்திற்கு கூடுதலாக காட்சிகள் திரையரங்க உரிமையாளர்கள் போட்டு வருகின்றனர். இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.