ஈஸ்வரி சொன்ன வார்த்தை பாக்யா கொடுத்த பதில், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

ஈஸ்வரியின் வார்த்தைக்கு பாக்யா பதில் கொடுத்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஈஸ்வரி தனியாக உட்கார்ந்து புலம்பி கொண்டிருக்க, செழியன் வருகிறார் இப்ப தானடா போன என்று ஈஸ்வரி கேட்க அப்பா தான் வர சொன்னாரு என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே கோபி வந்து விடுகிறார். என்ன விஷயம்பா எதுக்கு வர சொன்னிங்க என்று கேட்க கோபி சந்தோஷத்தின் உச்சத்தில் இருக்கிறார். உடனே இதை எப்படி சொல்றதுன்னு தெரியல நான் ரொம்ப இன்னைக்கு சந்தோஷமா இருக்கேன் என்று சொல்லுகிறார்.
உங்களுக்காக ஒரு குட் நியூஸ் சொல்ல போறேன் என்று சொல்லி செழியன் இடம் உன்கிட்ட ஒரு லிங்க் அனுப்பிச்சனே செக் பண்ணியா என்று கேட்க ஆமா அவர் பெரிய பிசினஸ் மேனு ஒரு பெரிய பணக்காரர் நிறைய பிசினஸ் பண்ணிக்கிட்டு இருக்காரு என்று பெருமையாக பேசுகிறார். உடனே அவர் கூட ஏதாவது பிசினஸ் பண்ண போறீங்களா என்று கேட்க இது அதைவிட ஒரு படி மேல என்று சொல்லி சுதாகர் நடந்து கொண்ட விஷயத்தையும் கேட்ட விஷயத்தையும் சொல்ல ஈஸ்வரி மற்றும் செழியன் இருவரும் சந்தோஷப்படுகின்றனர். நம்ம இனியாவ டிவில பார்த்துட்டு அவங்க பையன் ஆசைப்பட்டதா சொல்றாங்க இனியா ரொம்ப பெரிய இடத்துல சந்தோஷமா வாழ போறா என்று சொல்ல ஆனால் உங்க கிட்ட கேட்காம நான் சம்மதம் சொல்லிட்டு வந்துட்டேன் என்று சொன்னேன். ஈஸ்வரி நீ சம்மதம் சொல்லாம வந்திருந்தாதான் உன்னை திட்டி இருப்பேன் என்று சொல்லுகிறார்.
ஆனால் செழியன் அம்மா சம்மதிப்பாங்களா என்று கேட்க பேசி தான் ஆகணும் இனியாவோட வாழ்க்கை நல்லா இருக்கணும்னா நம்ம இந்த கல்யாணத்தை பண்ணி வைக்கணும் என்று முடிவெடுக்கின்றனர். உடனே ஈஸ்வரி நாளைக்கு காலைல நம்ம பாக்கியாவை பார்த்து பேசலாம் நான் பாக்கியாவை பார்த்து பேசுறேன்.இனியா கிட்ட பேசு என்று கோபியிடம் சொல்லுகின்றனர். மறுநாள் காலையில் செழியன் உட்கார்ந்து கொண்டிருக்க ஈஸ்வரி போன் போட்டு பாக்க வீட்ல இருக்காளா என்று கேட்டுவிட்டு போனை வைக்கிறார். கொஞ்ச நேரத்தில் எழில் மற்றும் பாக்யா இருவரும் வேலைக்கு கிளம்ப போக செழியன் உங்ககிட்ட முக்கியமான விஷயம் நாங்க பேசணும் என்று சொல்லி நிறுத்தி வைக்கிறார் அந்த நேரம் பார்த்து கோபியும் ஈஸ்வரியும் வருகின்றனர்.
சரி நீங்க உட்காருங்க நான் காபி போட்டு எடுத்துட்டு வரேன்னு சொல்லி கொடுத்துவிட்டு பிறகு பெரிய பிசினஸ் மேன் அவரோட பையன் இனியாவ டிவில பாத்துட்டு கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசைப்படுறாரு ரொம்ப பெரிய இடம் இனிய சந்தோஷமா வாழ்வா என்று பாக்கியாவிடம் சொல்ல அதற்கு இப்போ அதுக்கு எந்த அவசியமும் இல்லை. இனியாவுக்கு இப்ப கல்யாணம் பண்ணனும்னு எதுவும் இல்ல கொஞ்சநாள் போகட்டும் என்று சொல்ல, அவ இன்னும் படிக்கணும் என்று சொல்ல கோபி அதுதான் படிச்சு முடிச்சுட்டு வேலைக்கு போயிட்டாலே அதுக்கப்புறம் கல்யாணம் தானே என்று சொல்ல அவ இன்னொரு டிகிரி படிக்கணும் இப்ப அவளுக்கு கல்யாணம் தேவை இல்லை என்பதில் பாக்யா உறுதியாக இருக்கிறார்.
ஆனால் கோபி உன்கிட்ட இனியாவோட வாழ்க்கையோ விட்டுட்டா நீ எதுவும் பண்ண மாட்ட இந்த கல்யாணம் நாங்க பண்ண தான் போறோம் என்று சொல்லி கோபி சொல்ல பாக்யா பேச வருவதற்குள் ஈஸ்வரி போதும் நிறுத்து பாக்யா இதுக்கு அப்புறம் உன்கிட்ட வந்து கல்யாணம் பண்ணலாம் சம்மதம் வேணும்னு கேட்க வரல நாங்க கல்யாணம் பண்ண போறோம் உனக்கு விருப்பம் இருந்தாலும் இல்லன்னாலும் இந்த கல்யாணம் நடக்கும் என்று சொல்லிவிட்டு வெளியில் வந்து விடுகின்றனர் உடனே ஈஸ்வரி நீ இனியா கிட்ட பேசு கோபி என்று சொல்லுகிறார்.
உடனே கோபி இனியாவை சந்தித்து சுதாகர் பேசிய விஷயங்களை சொல்லியும் நித்திஷ் ஃபோட்டோ காண்பித்தும் இவன நீ கல்யாணம் பண்ணிக்கிட்டா உன்னோட லைஃப் செட்டில் ஆயிடும் நீ எப்பவுமே லைஃப் லாங் ஹாப்பியா இருப்ப என்று சொல்ல இனியா எனக்கு இப்போதைக்கு எந்த கல்யாணமும் வேணாம் எனக்கு எதுலயும் விருப்பமில்லை என்று சொல்லுகிறார். அதற்கு கோபி அந்த ஆகாஷ் பத்தி யோசிக்கிறியா என்று கேட்க ஆகாஷ் கதையை விடுங்க டாடி எனக்கு இப்போதைக்கு கல்யாணத்துல சுத்தமா விருப்பம் இல்ல நான் படிக்கணும் இன்னும் பெரிய வேலைக்கு எல்லாம் போகணும் என்று சொல்லிவிட்டு கிளம்ப போக கோபி பேசிக்கிட்டே இருக்கும்போது இப்படி போறது என்ன பழக்கம் இனியா உனக்கு என்ன பிரச்சனை சொல்லு என்று கேட்கிறார். இனியா முடிவு என்ன சொல்லுகிறார்? கோபியின் பதில் என்ன? பாக்யா என்ன சொல்லப் போகிறார்? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.
