வீட்டுக்கு கூப்பிட்ட மனோஜ், ரோகினி போட்ட கண்டிஷன், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
மனோஜ் ரோகினியை வீட்டுக்கு கூப்பிட, ரோகினி கண்டிஷன் போட்டுள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினி சுருதிக்கு போன் போட்டு பேச எனக்கு என்ன நடக்கும்னு தெரிஞ்சுக்க ரொம்ப இன்ட்ரஸ்டா இருக்கு நீங்களும் வந்துருங்க என்று சொல்லி போனை வைக்கிறார். உடனே ரவியிடம் அவங்க எதற்காக எனக்கு போன் பண்ணாங்க தெரியுமா அவங்க பக்கம் ஆள் சேர்க்கறதுக்காக என்று சொல்லுகிறார் உடனே ரோகினி மறுபக்கம் இவளை என் பக்கம் பேச வைக்கலாம்னு பார்த்தா உஷாரா இருக்கா என்று சொல்லி யோசிக்கிறார். வித்யா என்ன செய்யப் போற என்று கேட்க என் வாழ்க்கையை காப்பாத்திக்க நான் ஏதாவது செஞ்சு தான் ஆகணும் என்று முடிவு எடுக்கிறார்.
பாட்டியும் அண்ணாமலையும் வீட்டுக்கு வர முத்து அவர்களை வரவேற்கிறார் மீனாவிடம் பேசிய பிறகு முத்து மனோஜை கூப்பிட்டு உட்கார வைக்க, பாட்டி உனக்கு எப்பொழுது இருந்து இந்த பழக்கம் என் பையன நிம்மதியாக இருக்க விட மாட்டீங்களா ஆம்பள பசங்க பிறந்தா நிம்மதியா இருக்கலாம்னு கேள்விப்பட்டேன் ஆனால் என் பையனுக்கு அப்பதான் ஓடிக்கொண்டே இருந்தானா இப்ப வரைக்கும் நிம்மதி இல்லை அவள் கலங்கி உடைந்து நிற்கும் போது என் மனசே கஷ்டமாயிடுச்சு உங்க மூணு பேருக்கும் என்னதான் பிரச்சனை என்று திட்டுகிறார்.
ரவி ஸ்ருதி வீட்டுக்கு வர பாட்டி அவர்களிடம் நலம் நீங்க எங்கேயோ வெளியே போயிருந்ததா சொன்னாங்க என்று சொல்ல ஆமாம் பாட்டி வீட்டுல பிரச்சனை என்று தெரிந்ததும் வந்துட்டோம் என்று சொல்ல உன்னை விட சின்ன பசங்க வயசுல கரெக்ட்டா இருக்காங்க நீ மட்டும் ஏன் இப்படி இருக்க என்று பாட்டி கேட்கிறார்.உன் பொண்டாட்டி எங்க என்று கேட்க தெரியவில்லை என்று சொல்லுகிறார்.இது ஒரு பதிலா உன் பொண்டாட்டிய உங்க அம்மா வீட்டை விட்டு அடிச்சு அனுப்பி இருக்கா ஆனா நீ எங்கன்னு தெரியலன்னு சொல்ற என்று கேட்க அவர் பிரண்டு வீட்டுக்கு தான் போயிருப்பா என்று சொல்லுகிறார் சரி அங்கே போயிருந்தாலும் நீ வீட்டுக்கு கூப்பிட வேண்டாமா எல்லாரோட மனநிலையும் ஒரே மாதிரி இருக்காது என்று அட்வைஸ் கொடுக்கிறார்.
உடனே மனோஜிடம் நீ ரோகினிக்கு போன் போட்டு வர சொல்லு என்று சொல்ல அதற்கு மனோஜ் தயங்கிக் கொண்டு உட்கார்ந்து கொண்டிருக்கிறார்.உடனே பாட்டி இப்ப போன் பண்ண போறியா இல்லையா என்று சொல்ல ரூமுக்கு சென்று யோசித்து விட்டு நிற்கிறார். ரோகினியும் மனோஜ் போன் பண்ணுவான் என்று பார்த்துக் கொண்டிருக்க மனோஜ் போன் வருகிறது. ஆனால் இரண்டு மூன்று கால்கள் எடுக்காமல் இருக்க மனோஜ் எடுக்க மாட்ற பாட்டி என்று சொல்லுகிறார் அவர் தான் எங்க இருக்கான்னு தெரியும்ல போய் நேரில் கூட்டிட்டு வா என்று சொல்ல நேர்ல எல்லாம் போக முடியாது என்று சொல்லுகிறார் நான் வேணா இன்னொரு வாட்டி கால் பண்றேன் என்று சொல்லியும் போனை எடுக்காமல் இருக்கிறார்.
போன் எடுக்காம இருக்குறதுக்கு என்ன எதுக்கு பஞ்சாயத்துக்கும் கூப்பிட்டீங்க என்று பாட்டி கோபப்பட,சரி இந்த ஒரு வாட்டி போன் பண்றேன்னு சொல்லி மனோஜ் போன் பண்ணுகிறார். ரோகினி போன எடுக்க மனோஜ் பாட்டி வந்திருக்காங்க உங்க வீட்டுக்கு வர சொன்னாங்க என்று சொல்ல நான் வரமாட்டேன் என்று சொல்லுகிறார் ஆனால் மீண்டும் பாட்டி சொன்னதாக சொல்லி கூப்பிட நான் வரணும்னா ஒரு கண்டிஷன் இருக்கு என்று சொல்லுகிறார். ரோகினியின் கண்டிஷன் என்ன? மனோஜ் என்ன சொல்லுகிறார்? விஜயாவின் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
