ஜெனியை அனுப்ப முடியாது என அவருடைய பெற்றோர் கூற அதிர்ச்சி அடைகிறார் செழியன்.

Baakiyalakshmi Serial Episode Update 23.10.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. ஜெனியை வீட்டிற்கு கூட்டி வருவதற்காகக் செழியன் அவர்களது வீட்டிற்கு சென்றிருந்தார். ஜெனி செழியன் குழந்தை வேண்டாம் என கூறியதால் கரு கலைந்துவிட்டது குறித்து வீட்டில் கூறியதாக அனைவரும் செழியன் மீது கோபத்தில் இருந்ததால் ஜெனியை அனுப்ப முடியாது என கூறிவிட்டனர். அது உங்களோட சந்தோஷமாய் இருப்பானு தான் உங்களுக்கு கல்யாணம் பண்ணி வெச்சோம். ஆனா இங்க சந்தோஷமா இல்லைன்னு தெரிந்ததும் அவளை மனதளவிலும் தேற்ற வேண்டி உள்ளது என கூறுகின்றனர். செழியன் என்னிடம் நீ வரத்தானே எனக் கேட்க அவர் பதில் சொல்லாமல் உள்ளே சென்று விடுகிறார். இதனால் வீட்டுக்கு வந்த செழியன் தாத்தா பாட்டியிடம் நடந்ததை கூறுகிறார்.

தென்காசி விசுவநாத சுவாமி கோவில் : திருக்கல்யாண திருவிழா இன்று தொடக்கம்

ஜெனியை அனுப்ப முடியாது எனக் கூறிய பெற்றோர்.. செழியனை ஏற்றிவிடும் ஈஸ்வரி - பாக்கியலட்சுமி இன்றைய சீரியல் எபிசோட் அப்டேட்

ஈஸ்வரி இனி ஜெனி வீட்டிற்கு நீ போகாதே, அவங்களுக்கு என்ன அவ்வளவு திமிரு? இனி அவங்க பொண்ணு சந்தோஷமாக வாழ வேணும்னு நினைச்சா இங்கே கொண்டு வந்து விடட்டும் இல்லன்னா அவங்களே வெச்சு கட்டும் என கூறுகிறார். அதன்பிறகு செழியன் மாடிக்கு தூங்கச் சென்ற எழிலை தன்னுடன் இருக்குமாறு கூப்பிட்டுக் கொண்டு செல்கிறார். எழிலிடம் நடந்ததை சொல்ல அவர் ஜெனி கொஞ்ச நாள் இருந்துட்டு வரட்டுமே. இங்க வந்தா அவங்களை நீ அதுக்கப்புறம் கண்டுக்கவே மாட்ட என கூறுகிறார். ஒருவேளை ஜெனி வரவே மாட்டேனு சொல்லிட்டா என்ன செய்வது என கேட்க என் நல்ல முடிவுனு சொல்லுவேன் எனக் கூறுகிறார். கூட மனுஷன் வாழ்வான் என சொல்ல செழியன் நீ மாடிக்கு போய் தூங்கு என அனுப்பி விடுகிறார்.

Nayanthara-க்கு 7 Assistant வேணுமாம்! – Producer K Rajan Blasting Speech

அதன்பிறகு பாக்கியா கோபியிடம் கொஞ்சம் பேச வேண்டும் எனக் கூறிவிட்டு இந்த கதையை கூறுகிறார். நாளைக்கு அவங்க வீட்டுக்கு போய் பார்த்துட்டு வரலாம் என சொல்கிறார். கோபியும் போகலாம் என சொல்ல அந்த நேரத்தில் ராதிகா தொடர்ந்து போன் செய்கிறார். பாக்கியா எடுத்துப் பேசுங்க என சொன்னதும் கோபி யாரோ ஒருவரிடம் பேசுவது போல பேச ராதிக நாளைக்கு கார் எடுக்க போகணும் என கூறுகிறார். இத்துடன் முடிகிறது இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட்.