ஜெனியை வீட்டுக்கு கூட்டி வர சென்ற செழியனுக்கு எதிர்பாராத அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது.

Baakiyalakshmi Serial Episode Update 22.10.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. ராதிகா நானே இனியாவை இருபது நிமிஷத்தில் வீட்டிற்குக் கொண்டு வந்து விடுகிறேன் என கூறினார். இதனை பாக்கியா வீட்டில் உள்ளவர்களிடம் சொல்ல அதிர்ச்சி அடைந்தார் கோபி. அதன் பின்னர் கிச்சனுக்குச் சென்று பாக்கியாவிடம் ராதிகா இந்த வீட்டிற்கு வரக்கூடாது என சொல்லி இருக்கேன்ல. எதையாவது சொல்லி சமாளி என கூறிவிட்டு வருகிறார். அதன்பிறகு பாக்கியா வீட்டில் உள்ளவர்களிடம் சென்று ராதிகா எதற்கு கஷ்டப்படனும் நாமளே போயி இனியாவை கூட்டிக்கலாம் என கூறுகிறார். அங்கிருந்த எழிலிடம் இனியாவை கூட்டிட்டு வந்து விடு என கூறுகிறார். உடனே கோபி இப்பவே கிளம்பு என எழிலிடம் கூறுகிறார்.

தென்காசி விசுவநாத சுவாமி கோவில் : திருக்கல்யாண திருவிழா இன்று தொடக்கம்

ஜெனியை வீட்டுக்கு கூட்டி வரச் சென்ற செழியன்.. காத்திருந்த எதிர்பாராத அதிர்ச்சி - பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் அப்டேட்

எழிலும் எழுந்து கிளம்ப அவருக்கு ஒரு போன்கால் வருகிறது. உடனே ஆபீசுக்கு செல்ல வேண்டிய வேலை வந்துவிட்டதால் எழில் ஆபீசுக்கு சென்று விடுகிறார். அதனால் ஈஸ்வரி இப்போ இனியாவை யாரு கூட்டிட்டு வருவா எனக்கேட்க அவர் தான் என பாக்கியா கோபியை கோர்த்து விடுகிறார். நான் போக மாட்டேன் எனக்கு வெளிய போற வேலை இருக்கு என கோபி செல்ல அவருடைய அப்பா வா டா போய்ட்டு கூட்டிட்டு வரலாம் என்று கூட்டிக் கொண்டு செல்கிறார்.

என்ன நடக்கப் போகுதோ என பயந்துகொண்டே ராதிகா வீட்டிற்கு செல்ல ராதிகா இன்னும் வராததால் காரை மறைவாக கொண்டு சென்று நிறுத்துகிறார். அதன்பிறகு ராதிகா காரில் வந்து இறங்கி உள்ளே சென்ற பிறகு தனது அப்பாவை அனுப்பி இனியாவை அழைத்து வரச் சொல்கிறார். காரில் வந்து ஏறிய இனியா தன் அப்பாவிடம் முகம்கொடுத்து பேசாததால் கோபிக்கு இன்னும் டென்ஷன் அதிகமாகிறது.

இந்த வருஷம் Thalapathy படத்துல நான் இல்லை – Stunt Dheena Open Talk.!

வீட்டிற்கு வந்த பிறகு இனியாவிடம் அப்பா மீது ஏதாச்சு கோவமா எனக் கேட்க அதெல்லாம் ஒன்றுமில்லை நான் கவனிக்கலப்பா எனக் கூறுகிறார். அதன் பிறகுதான் கோபிக்கு உயிரே வருகிறது. உடனே ராதிகாவிற்கு போன் செய்து வீட்டிற்கு வந்துவிட்டாயா பிக்னிக் எப்படி போச்சு என்று விசாரிக்கிறார். உங்களோட சந்தோஷம் தான் என்னோட சந்தோஷம் என கூறி போனை வைத்து விட்டு திரும்பினால் அவருடைய அப்பா நிற்கிறார்.

உடனே தூக்கி வாரிப் போட கோபியை பார்த்து உனக்கு என்னதான்டா ஆச்சு காலையிலிருந்து ஒரே டென்ஷனா இருக்க எனக் கேட்கிறார் அவருடைய அப்பா. இனியா தனியா போய் இருந்ததால இந்த டென்ஷன் என கூறி சமாளித்து கொள்கிறார். அதன்பிறகு பாக்கியா கிச்சனில் இருக்கும் போது செழியன் வந்து ஜெனி என்னிடம் பேசவே மாட்ற அவளை வீட்டுக்கு வர சொல்லுமா நீ சொன்னா கேட்பா என்று கூறுகிறார். பாக்கியா நான் எதற்கு சொல்லணும் எனக் கேட்க பின்னர் ஒரு சில வாக்குவாதங்களுக்கு பிறகு இந்த வீட்டில் எனக்கு யாரும் உதவ வேண்டாம் நானே பார்த்துக்கொள்கிறேன் என கூறி விட்டு நேராக ஜெனி வீட்டிற்கு செல்கிறார்.

அங்கு செழியனை பார்த்த ஜெனியின் அப்பா, அம்மா சரியாக முகம் கொடுத்து பேசாமல் இருக்கின்றனர். அதன்பிறகு ஜெனி வந்ததும் ஜெனியிடம் நலம் விசாரிக்கிறார். ஜெனி மவுனமாய் இருக்க நான் உன்னை வீட்டுக்கு கூட்டிக் கொண்டு செல்ல தான் வந்தேன் என்று சொல்கிறார். ஜெனி இப்போதைக்கு எங்கேயும் வரமாட்டா அவ இங்கேயே இருக்கட்டும் என அவருடைய அப்பா கூற செழியன் அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் முடிகிறது இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட்.