அப்பா அம்மாவிடம் செழியன் பற்றிய உண்மையை உடைத்துள்ளார் ஜெனி.

Baakiyalakshmi Serial Episode Update 19.10.21 : சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல் பாக்கியலட்சுமி. கோபி ராதிகா வீட்டிற்குச் செல்லும்போது மய்யூ ராதிகாவை கடைக்கு கூட்டி செல்லுமாறு சண்டை போட்டுக் கொண்டிருந்தார். கோபி சென்று என்ன ஏது என்று விசாரித்தபோது நாளைக்கு பிக்னிக் செல்வதால் வேலை நிறைய இருக்கிறது அதனால் கடைக்கு நாளைக்கு போகலாம் என்று சொல்கிறேன் எனக் கூறினார் ராதிகா. மயு நான் கடைக்கு கூட்டிச் செல்ல சொல்வதே பிக்னிக் போவதற்கு பொருட்களை வாங்குவதற்கு தான். அது எப்படி நாளைக்கு வாங்க முடியும் என கூறுகிறார். இதனையடுத்து கோபி நான் உன்னை கரைக்குக் கூட்டிச் செல்கிறேன் என கூட்டிச்சென்று மயூ கேட்ட பொருட்களை வாங்கிக் கொடுக்கிறார்.

கேரளா கனமழையில் 27 பலி : பிரதமர்- முதல்வர் துரித நடவடிக்கைப் பணி..

கருகலைய செழியன் தான் காரணம்..  உண்மையை உடைத்த ஜெனி.‌. கடும் அதிர்ச்சியில் கோபி - பாக்கியலட்சுமி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

இந்த பக்கம் ஜெனி செழியனின் போன்காலை தொடர்ந்து கட் செய்கிறார். இதனால் அவருடைய அம்மா அப்பா இருவருக்கும் என்ன பிரச்சினை என கேட்கின்றனர். அப்போது ஜெனி, செழியனுக்கு இந்த குழந்தையின் மீது விருப்பம் இல்லை. இப்போது குழந்தை வேண்டாம் கலைத்துவிடலாம் கலைத்துவிடலாம் என்று சொல்லிக்கொண்டே இருந்தான் என இதுவரை நடந்ததை கூறுகிறார். இதனால் ஜெனியின் அப்பா ஜோசப் கடும் கோபம் அடைகிறார்.

இந்த பக்கம் வீட்டிற்கு வந்த கோபி தன்னுடைய மகள் இனியாவுக்கு சாக்லேட் வாங்கி வந்ததை எடுத்துக் கொடுக்கிறார். அதன் பிறகு நான் பிக்னிக் செல்கிறேன் என கேட்கிறார். அம்மாவோட பிரண்டோட செல்வதாக கூறியதற்கு கோபி பாக்கியம் இடம் பாதுகாப்பு தானே என கேட்டு விட்டு சரி போய்ட்டு வா என கூறுகிறார். அதன்பிறகு பாக்கியா ராதிகா கூடத்தான் போகிறாள் என கூறியதும் அதிர்ச்சி அடைகிறார். அதெல்லாம் ஒன்னும் போக வேண்டாம் என இனியாவிடம் கூறுகிறார். ஒரு நாள் இனிய நாள் கண்டிப்பாக போவேன் என அடம்பிடிக்கிறார். ஈஸ்வரி பாட்டியின் போய்டடு வரட்டுமே என சிபாரிசு செய்ய வேறு வழி இல்லாமல் அமைதியாக ஒப்புக்கொள்கிறார் கோபி.

இயக்குனர் பேசுகையில் பாதியில் குறுக்கிட்டு நிறுத்திய Harish Kalyan 

அதன் பிறகு இரவு பாக்கியாவிடம் வந்து பிக்னிக் செல்வது எனக்கு சரியா தோணல. அவள தனியா அனுப்புறது பயமாயிருக்கு என பேசுகிறார். சென்னையில்தான் கூப்பிட்டாங்க வேணும்னா நானும் போய்ட்டு வரவா உங்க பொண்ணு நான் பத்திரமா பார்த்து இருக்கிறேன் என கூறுகிறார் பாக்கியா. பாக்கியா நானும் போகிறேன் எனக் கேட்டதும் கோபிக்கு இன்னும் டென்ஷன் அதிகமாகிறது. ஒரு பிரச்சனை வந்தா அதுக்கு சொல்யூஷன் கொடுக்கணும். பிரச்சினையை இரண்டாக கூடாது என கோபமாக கூறிவிட்டு மேலே செல்கிறார். இத்துடன் முடிகிறது இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் அப்டேட்.