ஜெனியை விட்டு அமெரிக்கா செல்ல முடிவெடுத்துள்ளார் செழியன்.

Baakiyalakshmi Serial Episode Update 18.11.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்று ஈஸ்வரி பாட்டு தீபாவளி பற்றி பேசிக்கொண்டிருக்க பாக்கியா ஜெனியை அழைப்பது பற்றி பேச அவர் அதெல்லாம் கூடாது என சொல்லி விடுகிறார். இதனால் செழியன் கோபப்பட்டு மேலே சென்று விடுகிறார்.

பிறகு பாக்கியா ஜெனிக்கு போன் செய்து எப்போ வருவ என கேட்க ஜெனி பதில் சொல்ல முடியாமல் தவிக்கிறார். தீபாவளியை உன்னோடு கொண்டாட ஆசைப்படுகிறேன் என கூறுகிறார். நானும் உங்களை ரொம்ப மிஸ் செய்கிறேன் என சொல்லும் ஜெனி தீபாவளிக்கு வந்து விடு என பாக்கியா சொல்ல அப்பா இங்க ரொம்ப கோவமா இருக்காரு. அவரை மீறி என்னால் எதுவும் செய்ய முடியாது என கூறுகிறார். பாக்கியா சரியென போனை வைத்து விடுகிறார்.

யாரையும் பின்பற்றும் எண்ணம், எங்களுக்கு இல்லை : ரோகித் சொல்லும் ‘நியூ’ அடையாளம்..

ஜெனியை விட்டு அமெரிக்கா செல்லும் செழியன்..  ‌ ஜெனி எடுக்கப்போகும் முடிவு என்ன?? - பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோட் அப்டேட்

இந்த பக்கம் செழியன் ஜெனி இல்லாமல் இருக்க கஷ்டமாக இருப்பதால் அமெரிக்கா செல்ல முடிவெடுக்கிறார். இதுகுறித்து ஆபீஸ் செல்போனில் பேசிக் கொண்டிருக்கிறார். இந்த நேரத்தில் எழில் உள்ளே வந்து செழியனின் முடிவை அறிந்து கொள்கிறார். அதெல்லாம் வேண்டாம் என எழில் சொல்லியும் செழியன் கேட்கவில்லை. பிறகு சென்னைக்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்புகிறார். நான் அமெரிக்கா செல்கிறேன் இனி உன்னை தொந்தரவு செய்ய மாட்டேன் நீ சந்தோஷமாக இரு என கூறுகிறார்.

இந்த பக்கம் குடும்பத்தோடு இருக்கும் ஜெனி செழியனின் வாய்ஸ் மெசேஜ் கேட்டு கண்ணீர் விடுகிறார். அவருடைய அம்மா அப்பா என்ன என்று கேட்க இந்த வாய்ஸ் மெசேஜை ஜெனி காண்பிக்கிறார். இதனைக் கேட்ட அவருடைய அப்பா நடிக்கிறான் இதையெல்லாம் நீ நம்பி விடாதே. அமெரிக்க போனால் போகட்டும் என கூறுகிறார். ஜெனி அழுதுகொண்டே உள்ளே சென்று விடுகிறார். பிறகு அவருடைய அம்மா ஜெனியின் அப்பாவிடம் ஜெனி செழியனோடு சேர்ந்து வாழத்தான் ஆசைப்படுகிறா பிரச்சினையை தீர்த்து சேர்த்து வைப்பது தான் சரி என கூறுகிறார்.

பிறகு கோபி இனியாவுக்கு பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் எழில் வந்து அமர்கிறார். ஈஸ்வரி பாட்டி என்னம்மா சொல்லிக் கொடுக்கிறான் பாரு என கூறுகிறார். ‌ இவளுக்கு இதெல்லாம் சொல்லிக்கொடுக்க தெரியுமா என பாக்கியாவை கிண்டல் அடிக்க எனக்கு தெரியாது அத்தை என பாக்கியா சொல்கிறார். இந்த நேரத்தில் இதையெல்லாம் நெடுஞ்செழியன் அமெரிக்கா போகப் போகிறான் இது உங்களுக்கு தெரியுமா என எழில் கூறுகிறார். வீட்டில் உள்ள அனைவரும் எங்களிடம் சொல்லவே இல்லையே என அதிர்ச்சி அடைகின்றனர். கோபி நல்ல விஷயம்தானே குட் நியூஸ் என கூறுகிறார். இத்துடன் முடிகிறது இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட்.

அரசியல் செய்து இளைஞர்களை தூண்டிவிடாதீர்கள் – விஜய் பட தயாரிப்பளார் PT.Selvakumar பேட்டி

அடுத்து வெளியான புரோமோ வீடியோவில் பாக்கியா வாங்க இப்பவே ஜெனி வீட்டுக்கு போய்விட்டு வந்துவிடலாம் என்று கூப்பிடுகிறார். ஈஸ்வரி நான் வேண்டாம்னு சொல்லிட்டு இருக்கேன் அப்புறம் எனக்கு என்ன மரியாதை என கேட்கிறார். அதன்பிறகு பாக்கியா என்னை இப்படி பேசிட்டாங்க அப்படி பேசிட்டாங்கனு என்னால என்னுடைய புள்ளைங்க வாழ்க்கை கெட்டுப் போவதை பார்க்க முடியாது என்று கூறுகிறார்.