பாக்கியலட்சுமி ரித்திகாவிற்கு திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. டிஆர்பி யில் தாறுமாறாக சாதனை படைத்து வரும் இந்த சீரியலில் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

பாக்கியலட்சுமி ரித்திகாவுக்கு திருமணம்.. மாப்பிள்ளை இவர்தான் - தீயாக பரவும் தகவல்

அப்படியானவர்களில் ஒருவர் தான் ரித்திகா. எழிலின் காதலியாக அமிர்தா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவரது நடிப்புக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

தற்போது நிஜ வாழ்க்கையில் இவருக்கு திருமணம் நடைபெற உள்ளது. விஜய் டிவியில் கிரியேட்டிவ் டைரக்டராக பணியாற்றி வரும் வினு என்பவரை தான் திருமணம் செய்து கொள்ள உள்ளார். இருவருக்கும் குடும்பத்தார் உறவினர்கள் முன்னிலையில் வரும் நவம்பர் 27ஆம் தேதி திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற இருப்பதாக தெரியவந்துள்ளது.

பாக்கியலட்சுமி ரித்திகாவுக்கு திருமணம்.. மாப்பிள்ளை இவர்தான் - தீயாக பரவும் தகவல்

மாப்பிள்ளையும் விஜய் டிவியை சார்ந்தவர் என்பதால் இது காதல் திருமணமாகத்தான் இருக்கும் என தகவல்கள் கூறுகின்றன. வைரலாகும் தகவலை பார்த்த ரசிகர்கள் ரித்திகாவுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.