கல்யாணத்தை நிறுத்த வந்த அப்பாவை அசிங்கப்படுத்தி உள்ளார் கோபி.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் ராதிகா கோபமாக ரூமுக்குள் சென்ற நிலையில் கோபி இனி யாரும் வர மாட்டாங்க அவளை வெளியே போக சொல்லிடலாம் எந்த பிரச்சனையும் வராது என சமாதானப்படுத்த முயற்சி செய்கிறார்.

கல்யாணத்தை நிறுத்த வந்த அப்பாவை அசிங்கப்படுத்திய கோபி.. ராதிகா கொடுத்த அதிர்ச்சி - பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோட் அப்டேட்

ராதிகா உங்க ரிலேஷன்ஷிக்காக நான் எவ்வளவோ அசிங்கப்பட்டு கல்யாணம் மேடையில் இருந்து தனியா இறங்கி போக வெச்சிடாதீங்க என அழுகிறார். இப்போ உங்க வீட்ல இருந்து ஒவ்வொருத்தரா வந்து அசிங்கப்படுத்துவாங்க நீங்க வேடிக்கை தான் பார்ப்பீங்க என சொல்ல யார் வந்தாலும் என்ன நடந்தாலும் நான் பார்த்துக்கிறேன் இப்பவே உன் கழுத்துல தாலி கட்டி விடுகிறேன் என சொல்ல ராதிகாவின் அண்ணி அப்போ காலையில வரவங்களுக்கு என்ன பதில் சொல்றது என கூறுகிறார்.

முதல்ல பாக்கியாவை வெளிய அனுப்புங்க என ராதிகாவின் அண்ணாவிடம் கூறுகிறார் கோபி. அடுத்ததாக இந்தப் பக்கம் பாக்கியாவிடம் சாப்பாடு சூப்பராக இருக்கிறது என பாராட்டுகின்றனர். பிறகு பாக்கியா மாவரைத்து கொண்டிருக்க கோபியின் அப்பா மண்டபத்திற்குள் வந்து சத்தம் போட கோபி அவரிடம் சத்தம் போட்டு வெளியே போயா என புடிச்சி தள்ளிவிட பாக்கியா வந்து தாங்கி பிடிக்கிறார்.

இவதான் போன் போட்டு வர வெச்சிருப்பா என ராதிகாவின் அம்மா பேச வாயை மூடுங்கள். அவர் என் மாமா இங்க வந்து நாடகம் ஆட வேண்டிய அவசியம் இல்லை என கூறுகிறார் பாக்கியா. இந்த வயசுல உனக்கு கல்யாணம் பண்ண அசிங்கமா இல்லையா உங்க அம்மாவ நெனச்சு பாத்தியா? புள்ளைக்கு கல்யாணம் பண்ணிட்டு பேரன் பேத்தி எடுக்கிற வயசுல உனக்கு இது தேவையா என திட்ட ஆமா தேவைதான் 25 வருஷமா பிடிக்காது வாழ்க்கையிலிருந்து வெளியே வந்து சந்தோஷமா வாழப் போறேன் என கூறுகிறார்.

கல்யாணத்தை நிறுத்த வந்த அப்பாவை அசிங்கப்படுத்திய கோபி.. ராதிகா கொடுத்த அதிர்ச்சி - பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோட் அப்டேட்

உன் பிள்ளைங்க உன்னை இந்த கோலத்தில் பார்த்தால் நல்லா இருக்குமா என கேட்க இவளுக்கும் எனக்கும் எந்த ஓட்டும் வரவும் இல்ல என கோபி சொல்ல நீ விவாகரத்து பண்ணுது பாக்கியாவை தான் உன் பிள்ளைகளை இல்ல என சத்தம் சத்தம் போட்டு இந்த கல்யாணத்தை நடத்த விட மாட்டேன் என மாலையைப் பிடித்து எடுக்க கோபி அவரை பிடித்து தள்ள முயற்சி செய்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.