கல்யாண விஷயத்தில் ராதிகாவிடம் கோபி கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.

Baakiyalakshmi Episode Update 28.01.22 : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. கோபி ராதிகாவை கல்யாணம் செய்யப் போவதாக வெளியான தகவலால் கடும் அதிர்ச்சியில் இருக்கும் அவருடைய அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போகிறது. அவர் ஏதோ ஒரு சிந்தனையில் இருக்க பாக்கியா அவருக்கு பிபி செக் செய்கிறார். 160 என வருவதைப் பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர். ஹாஸ்பிடலுக்கு போயிட்டு வந்துடலாம் வாங்க என கூப்பிட கோபியின் அப்பா இப்போது வேண்டாம் தூங்கி எழுந்திருச்சா சரியா போய்விடும் என கூறுகிறார்.

கல்யாண விஷயத்தில் ராதிகாவிடம் கோபி வைத்த கோரிக்கை.. கோபியின் அப்பா எடுத்த முடிவு - பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோடு அப்டேட்

ஈஸ்வரி உங்களுக்கு இதுவரைக்கும் தலை வெளியே வந்ததும் இல்ல இவங்க டாக்டர்கிட்ட போய்ட்டு வந்து விடுவோம் என சொல்லி அதெல்லாம் ஒன்னும் இல்ல கொஞ்ச நேரம் தூங்கி எழுந்து விட்டாயா சரியா போயிடும் என திரும்பவும் கூறுகிறார்.

இந்த பக்கம் கோபி ராதிகாவுடன் ஹோட்டல் ஒன்றுக்கு சென்று அங்கு லஞ்ச் சாப்பிட்டு விட்டு கிளம்புகிறார். அங்கிருந்து கிளம்பும்போது ராதிகாவிடம் உன்கிட்ட கொஞ்சம் பேசணும் என கூறுகிறார். உங்க வீட்டை விட்டுவிட்டு வந்து உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு உங்களோட இடத்துல எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை நான் சந்தோஷமா வருவேன் என கூறுகிறார். ஆனா என்னால என் பொண்ண விட்டிட்டு இருக்க முடியாது என கோபி சொல்ல ராதிகா எனக்கு புரியல என்ன சொல்றீங்க என கேட்கிறார். இல்ல ஒருவேளை நான் என் வீட்டை விட்டு வந்தா என் பொண்ண கூட்டிட்டு வருவேன். நீ அவளை நல்லபடியா பார்த்துப்பியா என கோபி கேட்கிறார்.

கண்டிப்பா பார்த்துப்பேன். நீங்க என் பொண்ணு பார்த்து இருக்கும்போது நான் உங்க பொண்ணு பார்த்துக்க மாட்டாங்க நீங்க தாராளமா கூட்டிட்டு வாங்க என ராதிகா கூறுகிறார். எனது வீட்டில் ஈஸ்வரி வருத்தத்தோடு அமர்ந்திருக்க அப்போது வந்த அனைவரும் அவருக்கு ஆறுதல் கூறுகின்றனர். தாத்தாவுக்கு உடம்பு சரியில்லை என்ற செய்தியைக் கேட்ட எழில் நான் போய் பார்த்துவிட்டு வருகிறேன் என கூறுகிறார். அதற்குள் அவருடைய தாத்தாவே வெளியே வந்து நிற்கிறார். பிறகு எனக்கு ஒன்னும் இல்ல, வயசு ஆகுது இல்ல அதனால தான் கொஞ்சம் முடியல என சொல்கிறார்.

கல்யாண விஷயத்தில் ராதிகாவிடம் கோபி வைத்த கோரிக்கை.. கோபியின் அப்பா எடுத்த முடிவு - பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோடு அப்டேட்

பிறகு ஈஸ்வரி மட்டும் அமர்ந்து கொண்டிருக்கும் போது கோபி வருகிறார். கோபி இடம் உங்க அப்பாவுக்கு உடம்பு சரி இல்ல டா தலைவலி. காலையிலிருந்து படுத்துகிட்டே இருக்காது நீ போய் அவரை பார்த்து என்ன ஏதுனு கேளு என கூறுகிறார். தலைவலி தானே மாத்திரை போட்டாடசரியா போயிடும் அவர் எதுக்கு டிஸ்டர்ப் பண்ணனும் என சொல்லிவிட்டு மேலே சென்று விடுகிறார். என்ன இவன் போயிட்டு பார்த்துப் பேசுங்கள் சொன்னா போய்க்கிட்டே இருக்கும் என ஈஸ்வரி புலம்புகிறார்.

இந்தப் பக்கம் ரூமில் எழில் திரும்பவும் அவருடைய தாத்தாவுக்கு பிபி செக் செய்து பார்க்க பிபி அதிகமாக இருப்பதாக கூறுகிறார். வாங்க அப்படி நடந்துட்டு வரோம்னு சொல்லிட்டு டாக்டர்கிட்ட போய்ட்டு வந்துடலாம் என கூறுகிறார். அதெல்லாம் ஒன்னும் வேணாம் சரியா போயிடும் என அவருடைய தாத்தா சொல்லிவிடுகிறார். என்ன தாத்தா அப்பா ஏதாச்சு பண்றாரா என கேட்க ஏன் அப்படி கேட்கிற என கூறுகிறார் அவருடைய தாத்தா. இப்போ எல்லாம் அப்பாவால தான் உங்களுக்கு பிபி அதிகம் ஆகுது அதனால தான் கேட்கிறேன் என கூறுகிறார். அதெல்லாம் ஒன்றும் இல்லை என கூறி விடுகிறார்.

பிறகு ஈஸ்வரி பாக்கியா ஆகியோர் உள்ளே வந்து விடுகின்றனர். பிபி எவ்வளவு இருக்கு என பாக்யா கேட்க நார்மல் ஆயிடுச்சு என சொல்லி விடுகிறார் எழில். பிறகு இருவரையும் படுத்து தூங்க சொல்லிவிட்டு பாக்கியாவும் எழிலும் வெளியே வந்துவிடுகின்றனர்.

மயூ சொன்ன வார்த்தையால் தூக்கம் வராமல் தவிக்கிறார் கோபியின் அப்பா. ஈஸ்வரி தூங்கி கொண்டிருக்க இவர் எழுந்து நின்று உன் புள்ள பண்ண வேலை எல்லாம் தெரிஞ்சா நீ தாங்குவியா ஈஸ்வரி என வருத்தப்படுகிறார். இவனை இப்படியே விடக்கூடாது இதுக்கு ஒரு முடிவு கட்டியாக வேண்டும் என முடிவு செய்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

இதனைத் தொடர்ந்து வெளியான புரோமோவில் கோபியின் அப்பா கோபியிடம் சத்தம் போட்டு விட்டு கீழே இறங்கும் போது தவறி விழுந்து விடுகிறார்.