நான் போறேன் இனிமே உங்க வாழ்க்கையில பிரச்சனை இருக்காது என பாக்கியாவிடம் உளறியுள்ளார் ராதிகா.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோட்டில் ராதிகா தன்னுடைய அம்மா மற்றும் அண்ணன் இடம் மயூவை கூட்டிக்கொண்டு மும்பை செல்ல போகிறேன். இனிமே கோபியுடன் கல்யாணம் பத்தி பேசி டைம் வேஸ்ட் பண்ண வேண்டாம் என கூறுகிறார்.

நான் போறேன்.. இனிமே உங்க வாழ்க்கைல பிரச்சனை இருக்காது, பாக்கியாவிடம் உளறிய ராதிகா - பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோட் அப்டேட்

பாக்கியா சமையல் செய்யுமிடத்தில் ஏதோ யோசனையில் இருக்க செல்வி அவரை அமைதிப்படுத்தினார். வீட்டில் எனல் தாத்தாவிடம் சென்று அப்பாவிடம் என்ன பேசினீங்க ஏன் அவர் முகம் ஒரு மாதிரி இருந்துச்சு? ஏதாவது பிரச்சனையா என கேட்க அதெல்லாம் ஒன்றுமில்லை பாதியில் வந்த பாதையிலேயே போகப்போற அதான் உங்க அப்பன் வருத்தமா இருக்கான். கொஞ்ச நாள்ல எல்லாம் சரியாகிவிடும் இந்த வீட்டில எதுவும் தப்பா நடக்காது என கூறுகிறார். ‌

பிறகு ராதிகா பாக்கியாவை கோவிலில் சந்திக்கிறார். அப்போது மயூராவை அழைத்துக்கொண்டு மும்பைக்கு போகப் போகிறேன் என சொல்ல போயிட்டு எப்ப வருவீங்க என கேட்க இனிமேல் வரமாட்டேன் டிரான்ஸ்பர் வாங்கி விட்டு போகிறேன் என சொல்ல பாக்கியா வருத்தப்படுகிறார். அப்படியெல்லாம் சொல்லாதீங்க, கண்டிப்பா போய்த்தான் ஆகணுமா திரும்பி இங்கே வர மாட்டீங்களா என கேட்க வரமாட்டேன் என ராதிகா கூறுகிறார். மயூவை எங்க வீட்டில் விட்டுட்டு போங்க நான் பார்த்துக்கிறேன் அவளைப் பார்க்க வரும் போதாவது நீங்க என்ன பார்க்கலாம் என சொல்கிறார். அவை இல்லாம என்னால இருக்க முடியாது என கூறுகிறார்.

நான் போறேன்.. இனிமே உங்க வாழ்க்கைல பிரச்சனை இருக்காது, பாக்கியாவிடம் உளறிய ராதிகா - பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோட் அப்டேட்

இனிமே வர மாட்டேன் அதான் நல்லது. நான் தான் மும்பை போறேன்ல, இனி உங்க வாழ்க்கையில எந்த பிரச்சனையும் இருக்காது என கூறுகிறார். நீங்க உங்க கணவரோட சந்தோஷமா இருங்க என ராதிகா சொல்கிறார். ஆனால் ராதிகா இப்படி உலர்வதை கேட்டு பாக்கியத்திற்கு ஒன்றும் புரிந்து கொள்ளாமல் சாதாரணமாகவே பேசுகிறார். மும்பை போனாலும் அடிக்கடி எங்களைப் பார்க்க இங்க வாங்க இல்லனா கண்டிப்பா நான் உங்களைத் தேடி அங்கு வருவேன். உங்கள கூட பொறந்த மாதிரி நினைச்சு பழகிட்டேன். உங்கள பாக்காம என்னால இருக்க முடியாது என கூறுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.