ராதிகாவுடன் போனில் ரொமான்ஸாக பேசிக்கொண்டு இருக்க அதனை பார்த்து விடுகிறார் பாக்கியா.

Baakiyalakshmi Episode Update 19.01.22 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. உறவினர்கள் எல்லோரும் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது கோபிநாத் எங்கே அவருக்கு ஒரு நாள் கூட லீவு கிடையாதா எப்ப பாத்தாலும் போன்லேயே இருக்கான் என கேட்கின்றனர். பிறகு பாக்கியா நான் கூட்டிட்டு வரேன் என சென்று கோபியை சாப்பிட கூப்பிட அவர் எனக்கு பசிக்கல என கோபப்படுகிறார். நீங்க போய் சாப்பிடுங்க என சொல்கிறார். அங்க தான் என்னை நிம்மதியா இருக்க விடலை இங்கேயும் வந்து நிம்மதியா இருக்க விட மாட்றீங்க என சொல்ல நீங்க வந்து சாப்பிடுங்க அதற்கு அப்புறம் உங்களை யாரும் டிஸ்டர்ப் பண்ண மாட்டார்கள் என பாக்கியா கூறுகிறார்.

ராதிகாவுடன் போனில் ரொமான்ஸ்.. நேரில் பார்த்த பாக்கியா, கோபிக்கு காத்திருந்த அதிர்ச்சி - பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோட் அப்டேட்

அதன்பிறகு கோபி வந்து சாப்பிடுகிறார். பின்னர் உரியடிக்கும் போட்டி நடக்கிறது. இதில் எழில், செழியன், அவருடைய தாத்தா, கோபி என பலர் பங்கேற்கின்றனர். மேலும் கோபி வெற்றி பெறுகிறார்.

அதன் பிறகு அந்த எல்லோருக்கும் காபி கொடுக்கும்போது அவரை அமர வைத்து எழிலுக்கு அவரோட பொண்ணு பார்த்து இருக்கும் என ஒருவரை காண்பித்து கூறுகிறார். மேலும் எழில் உனக்கு அண்ணன் மாதிரி எப்பவும் உன் கூடவே இருப்பான் என கூறுகிறார். இதனால் அமிர்தாவின் முகம் மாறுகிறது. இருப்பினும் சரி பாட்டி எனக்கூறி அங்கிருந்து கிளம்புகிறார்.

ராதிகாவுடன் போனில் ரொமான்ஸ்.. நேரில் பார்த்த பாக்கியா, கோபிக்கு காத்திருந்த அதிர்ச்சி - பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோட் அப்டேட்

பிறகு எல்லோரும் ஊரில் இருந்து சென்னைக்கு கிளம்புகின்றனர். சென்னை வந்தடைந்ததும் அமிர்தா வீட்டிற்குள் வராமல் அப்படியே கிளம்புகிறேன் என கூறுகிறார். பாக்கியா உள்ள வந்து காப்பி குடித்துவிட்டு போகுமாறு பாக்கியா கூப்பிட இல்லமா டைம் ஆகிடும் நான் போறேன் அங்க அப்பா அம்மா தனியாக இருப்பாங்க என கூறுகிறார். பிறகு எழில் அவரை கூட்டிச்சென்று வீட்டில் விட்டு வருகிறார்.

இந்த பக்கம் பாக்கியா கோபியின் ரூமுக்கு சென்று துவைக்கும் துணிகளை எடுத்து வருகிறார். அதன் பின்னர் கோபி ராதிகாவுக்கு போன் செய்து ரொமான்ஸாக பேசிக் கொண்டிருக்க அந்த நேரத்தில் உள்ளே வந்து விடுகிறார் பாக்கியா. கோபி பேசுவதெல்லாம் கேட்டு அதிர்ச்சி அடைகிறார். பிறகு கோபி பாக்கியாவை பார்த்து அதிர்ச்சி அடைய நான் பேசியது எதையாவது கேட்டியா என கேட்கிறார். ஆமாம் என்ன பாக்கியா சொல்ல என் பிரண்ட் நாங்க இப்படித்தான் கிண்டலாக பேசிப்போம் அதெல்லாம் நீ ஒன்னும் தப்பா எடுத்துக்காத என கூறுகிறார். பாக்கியா முறைப்பாக பார்க்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.