கோபி கொடுத்த அதிர்ச்சி ஒரு பக்கம் இருக்க பாக்கியா ராதிகாவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் இன்றைய எபிசோட்டில் கோபி இனியா பெஸ்ட் ஸ்டுடென்ட்டாக தேர்வானதை பற்றி பெருமையாக பேச உங்க பொண்ண பத்தி பேசும்போது உங்கள் முகம் அப்படி பிரகாசமா இருக்கு என ராதிகா அதிர்ச்சி கொடுக்கிறார்.

யாருமே உங்கள மதிக்கல உங்கள ஒரு வார்த்தை கூட கூப்பிடல அப்படி இருக்கும்போது நீங்க எதுக்கு ஓடி வரணும்? உங்களுக்காக ஏங்குற மயூவை கண்டுக்க மாட்டீங்க என சொல்ல கோபி இனியாவை பற்றிய தொடர்ந்து பேச ராதிகா உங்களுக்கு இனியா மட்டும்தான் முக்கியம், மயூ பற்றி கவலையே கிடையாது கோபப்படுகிறார். கோபி உன்னிடம் சொன்னா எப்படி ரியாக்ட் பண்ணுவேன்னு தெரியல அதனால் தான் சொல்லல என்று சொல்ல அப்போ உங்க பொண்ணை கூட பார்க்க கூடாதுன்னு சொல்ற அளவுக்கு நான் கொடுமைக்காரி ஆகிட்டேன் அப்படித்தானே என அதுக்கும் கோபப்படுகிறார்.

பிறகு கோபி எதுவாக இருந்தாலும் வீட்டில் ரூம்ல போய் பேசிக்கலாம் இப்போ ரெண்டு பேருக்கும் ஆபீஸ் டைம் ஆச்சு கிளம்பலாம் என சொல்லி ராதிகாவை கொண்டு போய் ஆபீஸில் விடுகிறார். ராதிகா கேன்டீனுக்கு வர எதிரே பாக்கியா கையில் டீ கப்புடன் வர இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளாமல் ‌‌‌‌ மோதிக் கொள்ள டீ கீழே கொட்டுகிறது.

உடனே ராதிகா கோபப்பட பாக்யா மன்னிப்பு கேட்டு தரையை கிளீன் செய்கிறார். பிறகு ராதிகா கோபி ஸ்கூலுக்கு சென்ற விஷயங்களையும் நினைத்து பாக்கியாவிடம் நீங்க பிளான் பண்ணி கோபியை உங்கள் பக்கம் இழுக்க திட்டம் போடுறீங்க என சண்டை போட பாக்கியா அதுக்கெல்லாம் அவசியமே இல்ல நீங்க நல்லா கதை எழுதறீங்க உங்களுக்கு கற்பனை வளம் ஜாஸ்தியா இருக்கு என பதிலடி கொடுக்கிறார்.

மேலும் தன்னுடைய வாழ்க்கையை இழுத்துப் பிடிக்க நான் பல விஷயங்களை செய்தேன் ஆனால் அது முடியவில்லை. நான் அதில் இருந்து வெளியே வந்த பிறகுதான் சந்தோஷமாக இருக்கிறேன் இவ்வளவு நாளா ஒரு மூச்சு முட்டும் வாழ்க்கையைத்தான் வாழ்ந்திருக்கேன் என புரிந்து கொண்டேன். உங்க வாழ்க்கையை நான் பறிக்க மாட்டேன் நீங்க பயப்படாம தைரியமா வாழுங்க.

பயந்து பயந்து வாழ்ந்தா வாழ முடியாது என்ன நடக்குதோ நடக்கட்டும் எதுவாக இருந்தாலும் பாத்துக்கலாம்னு தைரியமாக வாழுங்கள் என பதிலடி கொடுத்துவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார்.

அதன் பிறகு இனியா கிச்சனில் அமர்ந்து படித்துக் கொண்டிருக்க வீட்டுக்கு வரும் கோபி இனியா பக்கத்தில் உட்கார்ந்து ஸ்கூலுக்கு வந்த விஷயத்தை வீடியோ எடுத்த விஷயத்தையும் காட்டி பெருமைப்பட ஒரு பக்கம் பாக்கியாவும் மறுபக்கம் ராதிகாவும் இதை பார்க்கின்றனர். பிறகு பாக்கியா கிச்சனிலிருந்து வெளியே வர அங்கு நின்று கொண்டிருந்த ராதிகா இதை பார்த்து கடுப்பாகி மேலே செல்கிறார்.

அதன் பிறகு இனியா தூங்கிக் கொண்டிருக்க பாக்கியா ஸ்போக்கன் இங்கிலீஷ் பிராக்டிஸ் செய்து கொண்டிருக்க பிறகு இனியா எழுந்து சொல்லிக் கொடுத்து விட்டு கோபி பேசிய விஷயங்களை சொல்ல பாக்கியா ஆறுதல் சொல்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.