போனில் கோபி சிரித்து சிரித்து பேசுவதை பார்த்த பாக்கியாவுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

Baakiyalakshmi Episode Update 17.01.22 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் பொங்கலைக் கொண்டாட எல்லோரும் சென்றுள்ள நிலையில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து ஜாலியாக பேசிக் கொண்டிருக்கின்றனர்.

போனில் சிரித்து சிரித்து பேசும் கோபி.‌. பாக்யாவுக்கு வந்த சந்தேகம், ஈஸ்வரி சொன்ன வார்த்தை - பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோட் அப்டேட்

பிறகு பாக்கியா வீட்டிற்குள் செல்லும்போது கோபி ரூமில் யாருடனோ போனில் சிரித்து சிரித்துப் பேசிக்கொண்டு இருப்பதைப் பார்க்கிறார். ஆனால் எதையும் கேட்காமல் பாக்கியா அமைதியாக கடந்து சென்றுவிடுகிறார்.

மேலும் கோலம் போடுவது, பெயிண்ட் அடிப்பது என குடும்பத்தார் பொங்கலை கொண்டாட வேலைகளைச் செய்து கொண்டிருக்கின்றனர். அதன் பிறகு இனியா அமிர்தாவின் குழந்தையை தூக்கி வைத்துக் கொஞ்சம் கொண்டிருக்கும்போது கோபியின் கையில் கொடுக்கிறார். கோபி பாப்பாவை வங்கி முத்தமிட்டு கொஞ்சுகிறார். பிறகு அமிர்தாவும் அங்கு வர அவரிடம் என்ன படிக்கிற என்ன ஏது என கேட்கிறார் கோபி. இதை பார்த்ததில் மகிழ்ச்சி அடைகிறார் எழில்.

அதன் பின்னர் அனைவரும் வெளியில் அமர்ந்து கொண்டிருக்கும் நேரத்தில் செழியன் ஜெனியை ரகசியமாக கூப்பிட இதனை பார்த்த செல்வி ஜெனி செழியன் தம்பி கூப்புடுது பாரு என கூறுகிறார். பிறகு அவருடைய தாத்தா எங்கேயாச்சும் அந்த புள்ளைய கூட்டிட்டு போயிட்டு வாடா என சொல்கிறார். இனியா நானும் வரேன் என சொல்ல பிறகு அமிர்தாவையும் கூட்டிக் கொண்டு கடைக்கு செல்கின்றனர்.

போனில் சிரித்து சிரித்து பேசும் கோபி.‌. பாக்யாவுக்கு வந்த சந்தேகம், ஈஸ்வரி சொன்ன வார்த்தை - பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோட் அப்டேட்

எழில் நானும் வரேன் என கிளம்ப ஈஸ்வரி பார்ட்டி அதெல்லாம் நீ போகத் தேவையில்லை என கூறி தடுத்து விடுகிறார். அவருடைய தாத்தாவும் நீ பெயிண்ட் அடிடா என சொல்லிவிட சரி என அவரும் போகாமல் நின்று விடுகிறார். சந்தைக்கு போய்ட்டு வந்த இவர்கள் அனைவருக்கும் வளையல் வாங்கிக் கொண்டு வருகின்றனர்.

பிறகு அனைவரும் படுத்து தூங்கி மறுநாள் காலையில் எழுந்து கொள்கின்றனர். அதற்குள் கோபியின் அப்பா காபி போட்டு அனைவருக்கும் வெந்நீர் வைத்து இருக்கிறார். அனைவரும் குளித்து முடித்துவிட்டு பொங்கல் வைக்க தொடங்குகின்றனர். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.