கோபியின் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளியுள்ளார் ராதிகா.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் கோபி ராதிகா வீட்டுக்குச் சென்று அவருடைய அம்மாவிடம் பேசிக் கொண்டிருக்க அப்போது வெளியே சென்றிருந்த ராதிகா வீட்டிற்கு வருகிறார். எல்லாத்தையும் மறந்துட்டு புதுசா நம்முடைய வாழ்க்கையை தொடங்கலாம் என கோபி முட்டிபோட்டு கெஞ்சிக் கேட்க ராதிகா கோபம் தணியாமல் வெளியே போக சொல்லி சத்தம் போடுகிறார். போக முடியாது என கோபி பிடிவாதம் பிடிக்க அவரை கழுத்தை பிடித்து வெளியே தள்ளுகிறார் ராதிகா.

கோபியின் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிய ராதிகா.. திடீரென ராதிகா வீட்டுக்கு வந்த பாக்கியா - பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோட் அப்டேட்

இதனையடுத்து மீண்டும் கோபி ராதிகாவிடம் பேச முயற்சித்தும் ராதிகா செவி கொடுக்காததால் அங்கிருந்து கிளம்பி விடுகிறார்.

இந்தப் பக்கம் ஜெனி வீட்டில் இருக்கப் போவதாக சொல்லி பாக்கியா வீட்டில் இருப்பவர்களையும் அழைக்க ஜெனி இப்போதைக்கு வரமுடியாது என்று சொல்லிவிடுகிறார். பிறகு அந்த வீட்டில் இருக்க எல்லோரும் வெளியே சென்று வரலாம் என சொல்லி செழியனிடம் சொல்லி ஏற்பாடு செய்ததாக கூறுகிறார். ஆனால் செழியன் வழக்கம் போல என்னால் செலவு செய்ய முடியாது என சொல்லி விடுகிறார்.

கோபியின் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிய ராதிகா.. திடீரென ராதிகா வீட்டுக்கு வந்த பாக்கியா - பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோட் அப்டேட்

பிறகு பாக்கியா ராதிகா வீட்டுக்கு சென்று பிரச்சனை குறித்து விசாரிக்க அவருடைய அம்மா ராதிகாவிடம் இவர் கோபி விவாகரத்து வாங்கிட்டு சந்தோஷமா இருக்க கூடாது என இங்க வந்து குட்டையைக் குழப்ப வந்திருக்கா என பாக்கியா பற்றி தவறாக பேசுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.