கோபியின் மீது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்துக்கு வந்த சந்தேகம் ராதிகாவால் உறுதியாகியுள்ளது.

Baakiyalakshmi and Pandian Stores Episode Update 20.05.22 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல்கள் பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ். இரண்டு சீரியலில் இணைந்து மெகா சங்கமம் என்ற பெயரில் ஒளிபரப்பாகி வருகிறது.

கோபியின் மீது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்துக்கு வந்த சந்தேகம்.. உண்மைகளை போட்டுடைத்த ராதிகா ‌‌-பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய முழு எபிசோட் அப்டேட்

இன்றைய எபிசோடில் கோபி ராதிகாவுடன் பார்த்த மூர்த்தி அதிர்ச்சி அடைந்து வீட்டிற்கு வருகிறார். பிறகு வீட்டில் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டிருக்க அந்த நேரத்தில் கோபி வீட்டுக்கு வர அவரிடம் பால் பாக்கெட் எங்கே எனக் கேட்க அமல பால் வாங்கிட்டு வரேன் என்று சொல்லிவிட்டு போனேன் வழி இல்ல என் பிரண்டு ஒருத்தன் பார்த்தேன் அவன் கிட்ட பேசிட்டு அப்படியே மறந்து விட்டேன் என கூறுகிறார். பிறகு சரி சாப்பிடலாமா என தனம் கேட்க கொஞ்ச நேரம் பேசலாம் அதுக்கப்புறம் சாப்பிடலாம் என கூறுகிறார் கோபி. நீங்க எல்லோரும் அந்த அதெல்லாம் எனக்கு ரொம்ப சந்தோசம் குறிப்பா அப்பா ரொம்ப சந்தோஷமா இருந்தா அது எப்போது டைம் கிடைக்குதோ அப்போ எல்லாம் வந்துட்டு போங்க என கூறுகிறார்.

பிறகு மூர்த்தி தனத்திடம் கோபியை ராதிகாவுடன் சேர்த்து பார்த்த விஷயத்தை கூறுகிறார். ராதிகா வரும்போது ரூமுக்குள் போனவர் அவர் வீட்டுக்கு கிளம்பும் வரை கீழே இறங்கவே இல்லை. எனக்கு என்னமோ தப்பாக தோன்றுகிறது என மூர்த்தி கூறுகிறார்.

கோபியின் மீது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்துக்கு வந்த சந்தேகம்.. உண்மைகளை போட்டுடைத்த ராதிகா ‌‌-பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய முழு எபிசோட் அப்டேட்

இந்தப் பக்கம் கதிர், ஜீவா, செழியன் மற்றும் எழில் ஆகியோர் பேசிக்கொண்டிருக்க கொஞ்ச நேரத்தில் செழியன் கீழே இறங்கி சென்று விடுகிறார். அதன்பிறகு ஜீவாவை மீனா அழைக்க அவரும் எழுந்து சென்றுவிட கதிர் எழிலிடம் என் அப்பாவிடம் சரியாக பேசுவதில்லை என கேட்க முதலில் உண்மையை சொல்லாமல் மறைத்த எழில் அதன்பிறகு கோபி பற்றிய உண்மைகளை சொல்கிறார். அப்பாவுக்கு வேற ஒருத்தவங்களோட தொடர்பு இருக்கு. நான் வேற ஒரு லேடி விட நிறைய முறை நேரில் பார்த்து விட்டு இது பற்றி நான் அப்பாவிடம் பேசி கூட அவர் கிடைக்கவில்லை அதனால் அவரை பார்க்கவே எனக்கு பிடிக்கவில்லை அதனால் தான் பேசுவதில்லை என கூறுகிறார். இந்த விஷயம் தாத்தாவுக்கு தெரிந்திருக்கு, அவருடைய இந்த நிலைமைக்கு அப்பாதான் காரணம் என கூறி கண்கலங்கி அழுகிறார்.

பிறகு கதிர் எழிலை சமாதானம் செய்து தேற்றுகிறார். அதன்பிறகு கதிர் இந்த விஷயத்தை மூர்த்தியிடம் வந்து சொல்ல ராதிகாவுக்கும் கோபிக்கும் இடையே ஏதோ இருக்கு ஆனால் கோபி ராதிகாவை இந்த வீட்டில் சந்திக்க கூடாது என இருக்கிறார். முதலில் ராதிகாவிடம் பேசி என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம் என முடிவு செய்கின்றனர்.

மறுநாள் காலையில் மூர்த்தி மற்றும் தனம் இருவரும் ராதிகா வீட்டிற்கு சென்றனர். அவர்களிடம் ராதிகா நேற்று பிறந்த நாள் விழாவில் உங்கள் எல்லோரையும் பார்த்தது ரொம்ப சந்தோஷம். பாக்கியா உங்க மேல ரொம்ப மரியாதை வச்சிருக்காங்க என சொல்ல எனக்கும் டீச்சரை ரொம்ப பிடிக்கும் நான் சொந்த வீடு வாங்கும் போது என் கூட அவங்க வீடு வாங்கணும் மாதிரி குடும்பமாய் இருந்து பால் காசி கொடுத்தாங்க என கூறுகிறார். நீங்கள் யாரையோ ஒருத்தரை கல்யாணம் பண்ணிக்க போறேன் என்று சொன்னீங்ள அவர்களுடைய போட்டோ இருக்கா சும்மா பார்க்கலாமா என மூர்த்தி கேட்கிறார். ராதிகா போட்டோ இருக்கு என போட்டோவை எடுத்து காண்பிக்க கோபியை பார்த்ததும் அதிர்ச்சி அடைகின்றனர். இத்துடன் இன்றைய மெகா சங்கமம் எபிசோட் முடிவடைகிறது.

கோபியின் மீது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்துக்கு வந்த சந்தேகம்.. உண்மைகளை போட்டுடைத்த ராதிகா ‌‌-பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய முழு எபிசோட் அப்டேட்

பின்னர் வெளியான ப்ரோமோ வீடியோவில் மூர்த்தி கோபியை கண்டிக்க கோபி என்னைக் கேள்வி கேட்க நீ யார் என சத்தம் போடுகிறார். இந்த சத்தம் கேட்டு குடும்பத்தார் எல்லோரும் மேலே ஓடிவந்து கதவை தட்டுகின்றனர்.