அயலான் திரைப்படத்தின் டீசர் குறித்த அறிவிப்பு வைரலாகி வருகிறது.

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் மாவீரன் திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். இப்படம் வரும் ஜூலை 14ஆம் தேதி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியாக உள்ளது.

இதனைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் SK21 திரைப்படத்தில் நடித்து வருகிறார். சாய்பல்லவி கதாநாயகியாக நடித்துவரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் ஆர் ரவிக்குமார் இயக்கத்தில் 24 AM ஸ்டுடியோஸ் & KJR ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள அயலான் திரைப்படம் குறித்த அப்டேட் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஏ ஆர் ரகுமான் இசையில் ரகுல் ப்ரீத் சிங் கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படம் நிறைய கிராபிக்ஸ்களுடன் ஏலியனை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது.

ரசிகர்கள் வெகு நாட்களாக காத்துக் கொண்டிருந்த இப்படம் வரும் தீபாவளி பண்டிகைக்கு வெளியாக இருப்பதாக படக்குழு ஏற்கனவே அதிகாரவபூர்வமாக அறிவித்திருந்ததை தொடர்ந்து தற்போது புதிய அப்டேட்டாக இப்படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என்ற அறிவிப்பை படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த தகவலால் உற்சாகமடைந்த ரசிகர்கள் டீசருக்காக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.