Atlee in Next Movie Info
Atlee in Next Movie Info

தமிழ் சினிமாவின் பிரபல நடிகருடன் அட்லி இணைந்துள்ளதாக அவருடைய அடுத்த படம் பற்றிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

Atlee in Next Movie Info : தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி அதன் பின்னர் ராஜா ராணி என்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் அட்லி.

இந்த படத்தை தொடர்ந்து இவர் தளபதி விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என தொடர்ச்சியாக மூன்று படங்களை இயக்கினார்.

இந்தப் படங்களைத் தொடர்ந்து இவர் ஷாருக்கானை வைத்து ஒரு படத்தை இயக்க இருப்பதாக கூறப்பட்டு வந்தது. பின்னர் அப்படம் கைவிடப்பட்டதாக தகவல்கள் கசிந்தன.

பிஞ்சு போன சட்டை, செருப்பு என திரிந்தவரை ஒரே வாய்ப்பில் பெரிய இயக்குனராக்கிய அஜித் – இந்த இயக்குனர் யார் தெரியுமா?

இது ஒருபுறமிருக்க அட்லி தயாரிப்பாளராகவும் சில படங்களை தயாரிக்க தொடங்கியுள்ளார். தற்போது அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள அந்தகாரம் என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தை தொடர்ந்து தன்னுடைய உதவி இயக்குனர் ஒருவரின் படத்தை தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் ஹீரோவாக ஜெயம் ரவி நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.