Ashwin About Kritika Udhayanidhi Movie

உதயநிதி படத்திலிருந்து அஸ்வின் விலகியது ஏன் என விளக்கம் அளித்துள்ளார்.

Ashwin About Kritika Udhayanidhi Movie : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக்கு வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் அஸ்வின்.

விழித்திரையில் ஓ காதல் கண்மணி, ஆதித்ய வர்மா உள்ளிட்ட படங்களில் சிறிய வேடங்களில் நடித்திருந்தார். அஸ்வினுக்கு வெள்ளித்திரையில் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்பதுதான் ஆசை. மேலும் இவர் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவாக இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார்.

ஆனால் திடீரென இந்த படத்தில் இருந்து விலகி கொண்டார். இந்நிலையில் தற்போது இத்திரைப்படத்தில் இருந்து விலகி கொண்டுள்ளார். அதற்கான காரணம் என்ன என அஸ்வின் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். அதாவது கிருத்திகா உதயநிதி கூறிய கதை தனக்குப் பிடித்ததாகவும் ஆனால் தனக்கு வெள்ளித்திரையில் ஹீரோவாக வேண்டும் என்பதுதான் ஆசை. கிருத்திகா இந்த கதையை வெப்சீரிஸ் தொடராக இயக்க இருப்பதால் இதிலிருந்து விலகிக் கொண்டதாக விளக்கம் அளித்துள்ளார்.